அக்கம்பக்கத்து ஊர்களைச் சேர்ந்தவர்கள் மது வாங்க திரண்டதால் மதுக்கடையை அகற்ற கோரி போராட்டம்
அக்கம்பக்கத்து ஊர்களைச் சேர்ந்தவர்கள் மதுவாங்க திரண்டு வந்ததால், தங்கள் ஊரில் உள்ள மதுக்கடையை அகற்ற வேண்டும் என்று கோரி கிராம மக்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் திடீர் பரபரப்பு உருவானது. அவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
ஆலங்குளம்,
நெடுஞ்சாலையோரம் உள்ள மதுக்கடைகளை மூடக்கோரி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மதுக்கடைகள் அகற்றப்பட்டன.
நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டு விட்டன. இதனால் ஆலங்குளம் மற்றும் அதன் அக்கம்பக்கத்து கிராமங்களை சேர்ந்த மதுப்பிரியர்கள் மது வாங்க முடியாமல் அவதிப்பட்டனர்.
ஆலங்குளம் அருகே பூலாங்குளம், நாட்சியார்புரம் விலக்கு பகுதிகளில் உள்ள மதுக்கடைகளுக்கு ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த ஏராளமானவர்கள் சென்றனர். இதனால் அந்த மதுக்கடைகளில் நேற்று கூட்டம் அலைமோதியது. வெளியூர்களைச் சேர்ந்த நிறைய பேர் மது வாங்குவதற்காக தங்கள் ஊருக்கு வந்திருப்பதால், தேவையற்ற பிரச்சினைகள் எழலாம் என்று கருதிய பூலாங்குளம் கிராம மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
முற்றுகை போராட்டம்
தங்கள் ஊரில் உள்ள மதுக்கடையையும் அகற்ற கோரி பூலாங்குளம் கிராமத்தை சேர்ந்த ஏராளமான ஆண்களும், பெண்களும் திரண்டு மதுக்கடை முன்பு முற்றுகையிட்டு நேற்று காலையில் போராட்டம் நடத்தினார்கள். உடனே கடை ஊழியர்கள், மதுக்கடையை பூட்டிவிட்டு சென்றுவிட்டனர். ஆனால் கிராம மக்கள் தொடர்ந்து அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆலங்குளம் தாசில்தார் சுப்புராயலு, போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பூலாங்குளத்தில் இருந்து வேறு இடத்திற்கு அந்த மதுக்கடை மாற்றப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து முற்றுகையில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
பாரில் இருந்த சத்துணவு முட்டைகள்
கிராம மக்கள் போராட்டம் நடத்தி கொண்டு இருக்கும் போது, சிலர் மதுக்கடை அருகே இருந்த பாரின் உள்ளே புகுந்தனர். அங்கு சென்று பார்த்த போது, நீல நிற மை அச்சு வைக்கப்பட்ட சத்துணவு முட்டைகள் பாரின் உள்ளே இருந்தன. இதை பார்த்து கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தாசில்தார் சுப்புராயலுவிடம் புகார் கூறினார்கள். பள்ளிக்கூட குழந்தைகளுக்கு சத்துணவுடன் வழங்கப்பட வேண்டிய முட்டைகள் மது பாருக்கு எப்படி வந்தது? இந்த முறைகேட்டில் தொடர்புடையவர்கள் யார்–யார்? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.