கும்மிடிப்பூண்டி அருகே தொழிலாளி தற்கொலை
கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூர் அருகே உள்ள சாலை கிராமத்தை சேர்ந்தவர் குமார் (வயது 43). கூலித்தொழிலாளி
கும்மிடிப்பூண்டி,
கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூர் அருகே உள்ள சாலை கிராமத்தை சேர்ந்தவர் குமார் (வயது 43). கூலித்தொழிலாளி. இவருக்கு கவிதா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த மாதம் 21–ந்தேதி வீட்டில் தனியாக இருந்த குமார், வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை குடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குமார் நேற்று பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுடலைமணி தலைமையிலான ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.