உஷாரய்யா உஷாரு..
அவர் வீட்டிற்கு ஒரே மகன். அவர் சிறுவனாக இருந்தபோதே தந்தை இறந்து விட்டதால், தாயாரால் வளர்க்கப்பட்டவர்.
அவர் வீட்டிற்கு ஒரே மகன். அவர் சிறுவனாக இருந்தபோதே தந்தை இறந்து விட்டதால், தாயாரால் வளர்க்கப்பட்டவர். தாயார் அவரை ஒரு பெண் குழந்தை போன்று பொத்திவைத்து வளர்த்தார். அதனால் பள்ளி, கல்லூரியில் படிக்கும் போது கூட தனக்கென்று நண்பர்கள் கூட்டம் எதையும் அவர் உருவாக்கிக் கொள்ளவில்லை. தாய் சொல்லே மந்திரம் என நினைத்துக் கொண்டு, அம்மா பிள்ளையாக நடந்து கொண்டார். முழுநேரமும் படித்துக் கொண்டே இருந்ததால், நன்றாக படித்தார். அரசு வேலையும் கிடைத்தது.
அவருக்கு பெண் தேடினார்கள். ‘வீட்டை விட்டு வெளியே செல்லாத நல்ல பையன். அதிர்ந்து பேசத் தெரியாது. வாழ்க்கையில் ஒருநாள்கூட அவன் யாரிடமும் சண்டை போட்டதில்லை’ என்பதை எல்லாம் சிறப்பாகக்கூறி, அவருக்கு பெண் பார்த்தார்கள். உண்மையில் அவரது சுபாவமே அதுதான் என்பதால், பலரும் பெண் கொடுக்க போட்டிபோட்டார்கள்.
ஒருவழியாக நன்றாக படித்த ஒரு பெண் அவருக்கு கிடைத்தாள். திருமணமும் நல்லபடியாக நடந்தது. திருமணமாகி கணவன் என்ற நிலையை அடைந்த பின்பும் அவர் முன்புபோலவே நடந்துகொண்டார்.
மனைவியோ கணவரோடு வெளியே சென்றுவரவேண்டும் என்று விரும்புவாள். அவரோ வேலைக்கு போய்விட்டு வீட்டுக்கு வந்தால் வீட்டுக்குள்ளே முடங்கிக் கொள்வார். மனைவி, தனது கணவர் எல்லோரிடமும் சகஜமாக பேசிப் பழக வேண்டும் என்று விரும்பினாள். ஆனால் அவரோ வீட்டில் உட்கார்ந்து அம்மாவிடம் மட்டுமே பேசிக்கொண்டிருப்பார். அக்கம்பக்கத்து வீட்டினரோடு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டாலும், எதிர்த்து பேசத் தெரியாமல் திக்கித்திணறி வீட்டுக்குள்ளே போய் உட்கார்ந்துவிடுவார்.
கணவரின் இத்தகைய குணாதிசயங்கள் மனைவியை எரிச்சலடைய வைத்தன. கணவரை குறைசொன்னாள். கணவர் அப்படி அப்பாவித்தனமாக நடந்து கொள்ள மாமியாரின் வளர்ப்புமுறை சரியில்லை என்றுகூறி, மாமியாரையும் கடிந்து கொண்டாள். இதனால் மாமியார்– மருமகள் பிரச்சினை தலைதூக்கியது. அவ்வப்போது மோதிக்கொண்டார்கள்.
இந்த நிலையில் அவள் ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தாள். அந்த குழந்தையை மாமியார் எடுத்து கொஞ்ச முயற்சிக்கும்போதெல்லாம், ‘குழந்தையை எடுக்காதீங்க. உங்க பையனை ஊர் உலகம் தெரியாத அப்பாவியாக வளர்த்த மாதிரி, இவனையும் வளர்த்திடுவீங்க. அதனால குழந்தையை வளர்க்கிற விஷயத்திலும் தலையிடாதீங்க!’ என்றாள். இதனால் மாமியார்– மருமகள் பிரச்சினை உச்சகட்டத்தை அடைந்தது.
இந்த மாதிரி ஏற்படும் மோதல்களை எப்படி எதிர் கொள்ளவேண்டும்? ஒரு ஆணாக இருந்து இரண்டு பெண்களையும் எப்படி சமாளிக்கவேண்டும்? என்பதெல்லாம் தெரியாததால், அவர் மிகுந்த மனஉளைச்சலுக்கு உள்ளானார். யார் பக்கம் பேசுவது? என்ன செய்வது? என்று தெரியாத அவர், திடீரென்று ஒருநாள் காணாமல் போய்விட்டார்.
நாட்கள் மாதங்களாகி, மாதங்கள் வருடங்களாகிவிட்டன. இதுவரை எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. எத்தனையோ இடங்களில் எப்படி எல்லாமோ புகார் செய்தும் எந்த துப்பும் கிடைக்கவில்லை. அவர் உயிரோடு இருக்கிறாரா? என்பதும் தெரியவில்லை.
அவர் வீட்டில் இருந்த நாள் வரை ஓயாத சண்டையிட்டுக்கொண்டிருந்த மாமியாரும்– மருமகளும் இப்போது பகைமையை மறந்து ஒன்றாகி, பள்ளிக்கு சென்று கொண்டிருக்கும் அந்த சிறுவனிடம், ‘வெளிநாட்டுக்கு வேலைக்கு போயிருக்கும் உன் அப்பா அடுத்த வருஷம் வருவார்..!’ என்று திரும்பத் திரும்ப பொய் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
ஊர்.. உலகத்தில் நடக்கிறதை உங்க காதிலேயும் போட்டு வைக்கிறோம் அவ்வளவுதானுங்க..!
– உஷாரு வரும்.