9. பிறவிப் பெருங்கடல்
எத்தனை வயதானவர்களுக்கும் கடற்கரையில் நின்று அலைகளில் கால்களை நனைப்பதில் அலாதி மகிழ்ச்சி.
நீரைப் பார்க்கும்போது பரவசம் அடையாதோர் உண்டோ! மழைத்துளியாக மண்ணை முத்தமிடும்போதும், அருவியாக விழும் போதும், ஊற்றாக எழும்போதும், ஓடையாக ஓடும்போதும், குளமாகத் தேங்கும்போதும், ஆறாகப் பாயும்போதும், கடலாகக் கலக்கும் போதும் கண்களை ஈர்ப்பது நீர்.
எத்தனை வயதானவர்களுக்கும் கடற்கரையில் நின்று அலைகளில் கால்களை நனைப்பதில் அலாதி மகிழ்ச்சி. அருவியில் குளிப்பவர்களுக்கு அதைவிட்டு வெளிவரவே மனமிருப்பதில்லை. எத்தனை முறை ஊட்டிக்குச் சென்றாலும் படகுசவாரி செய்தால்தான் பயணம் திருப்தியான நிறைவு பலருக்கும். ஆற்றங்கரையில் அமர்ந்து சுழித்து ஓடும் நதியை வெறித்துப் பார்க்கும்போது அத்தனை கவலைகளும் பறந்துபோய் விடுகின்றன.
தண்ணீர் மட்டுமே சமமாக இருக்கிறது. பள்ளங்களில் ஓடினாலும் ஒரே அளவில் தன்னை நிரவிக்கொண்டு நடக்கிறது. பள்ளங்களையும் நிரப்புவதற்காகவே நதி. ஆனாலும் நாம் அவற்றை ஏமாற்றிவிட்டு மேடுகளுக்கே திருப்பி விடுகிறோம். ஆற்றின் நீரும் வசதியானவர்களின் வாய்க்கால்களிலேயே நிறைந்து ஓடுகிறது. மாநகரத்தில் இருப்பவர்கள் பயன்படுத்தும் தண்ணீரின் அளவு எப்போதும் அதிகம்.
தண்ணீர் கற்றுத் தருகிறது. ஆழமான இடங்களில் அமைதியாகவும், மேம்போக்கான இடங்களில் ஓசையோடும் ஓடுகிறது. ஆழமான மனிதர்கள் எப்போதும் ஆற்றைப்போல அமைதியாகவே இருக்கிறார்கள். தடை இருக்கிற இடத்தைச் சுற்றி ஓடி நடையைத் தொடர்கிறது நதி. விமர்சனங்களைத் தாண்டி இயங்க வேண்டும் என்பதே அது தரும் நீதி. சொரசொரப்பான பாதைகளையும் தொடர்ந்து தழுவி வழவழப்பாக்குகிறது அது. இடைவிடாத முயற்சியால் வறட்டு நிலங்களை மட்டுமல்ல, முரட்டுக் கற்களையும் மென்மையாக்க முடியும் என்பது தண்ணீர் தருகிற தகவல்.
நெருப்பின் மீது நீர் தெளித்தால் அது அணையும். அது சிறு நெருப்புக்கே பொருந்தும். பெரும் நெருப்போ நீரையே ஆவியாக்கும். தண்ணீரை பாத்திரத்தில் வைத்து கீழே நெருப்பு மூட்டினால் காணாமல் போவது நீர். பஞ்சபூதங்களுக்குள் போட்டி எதுவும் இல்லை, புரிந்துணர்வு ஒப்பந்தம் மட்டுமே உண்டு.
நீரில் விளையாடி மகிழும்போது நாம் மறுபடி குழந்தையாகி விடுகிறோம். ஜனனம் கருவறை திரவத்தில் உதயமானதாலோ, உயிர்கள் கடலில் உண்டானதாலோ பரிணாம வளர்ச்சியின் மிச்சசொச்சங்கள் இன்னும் நம்மிடம் எச்சமாய் எஞ்சி இருக்கின்றன.
ஒருமுறை யமுனை நதிக்கரையில் முழங்கால்வரை நீரில் நனைத்து மணிக்கணக்கில் அமர்ந்திருந்தேன். பனிக்கட்டியை ஒத்த சில்லென்ற நீரின் பிரவாகத்தில் நானும் கரைந்து போனேன். இத்தகைய நதி ஒன்றை தமிழகத்திற்குக் கடத்திப்போய்விடலாமே என்றுகூடத் தோன்றியது.
இந்தியாவில் எல்லா நதிகளுக்கும் பெண்களின் பெயர், பிரம்ம புத்திராவைத் தவிர. கிருஷ்ணா என்பது கிருஷ்ணவேணியின் சுருக்கம். மடியில் பல்லாயிரக்கணக்கான உயிர்களுக்கு இடம் கொடுப்பதால் பெண்ணின் பெயர்.
நதி ஏன் சில இடங்களில் வயலைப்போல் சமமாக இருக்கிறது, சில இடங்களில் வன்மத்தோடு ஓடுகிறது, சில இடங்களில் சுழலாய் இருந்து வருகிறவர்களை இழுத்துக்கொண்டுவிடுகிறது என்பதற்கு விளக்கங்கள் சொல்லலாம், தீர்வு சொல்ல முடியாது.
மூழ்குவது முனைப்பைக் குறிக்கும். கடலில் மூழ்குபவர்கள் முத்துக் குளிக்கிறார்கள். இலக்கியத்தில் மூழ்குபவர்கள் காவியம் படைக்கிறார்கள். விளையாட்டில் மூழ்குபவர்கள் பதக்கம் பெறு கிறார்கள். அறிவியலில் மூழ்குபவர்கள் கண்டுபிடிக்கிறார்கள். ஆன்மிகத்தில் மூழ்குபவர்கள் ஞானம் அடைகிறார்கள்.
மூழ்குவது ஒரு கட்டத்தில் வெளியே வருவதற்காக. நீந்தும்போது யார் அதிக நேரம் மூச்சைப் பிடித்துக்கொண்டு தண்ணீருக்குள்ளேயே தவமிருக்க முடியும் என்று சிறுவர்கள் போட்டி போடுவதுண்டு. ஒருசிலர் வழக்கத்தைக் காட்டிலும் அதிக நேரம் வெளியே வராவிட்டால் பயந்து தேடுவதும் உண்டு. தண்ணீருக்குள் தம்பிடித்து தாக்குப்பிடிப்பது கடினம்.
நம்மிடம் கடலில் மூழ்கி இறந்தவர்களைவிட கடனில் மூழ்கி இறந்தவர்கள் அதிகம். காரணம், தாக்குப்பிடிக்கும் சக்தியை தவறாகக் கணக்கிட்டதே.
உயிரை நீட்டிக்கும் நதியே வாழ்வைப் பறிக்கும் அவலங்களும் உண்டு. அதற்கு நதி காரணமல்ல, நாமே காரணம். இருவர் ஏறுகிற படகில் 20 பேர் ஏறினால் ஆறு என்ன செய்யும்! கையைக் கொடுத்துக் காப்பாற்ற நாம் என்ன பொன்னியின் செல்வர்களா!
இந்தியா முழுவதும் எண்ணற்ற ஆறுகள் பாரதத்தாயின் உடலெங்கும் ஓடுகின்றன. பல இடங்களில் பாலங்கள் கட்டுவது சாத்தியமில்லை. பருமனான அவற்றின் அகலத்தை நீந்திக் கடக்கவும் சாத்தியமில்லை. பிறவிப் பெருங்கடலைப்போலப் பெரிதாக இருக்கும் அவற்றைப் படகுகொண்டு மட்டுமே கடக்க முடியும்.
ஒருமுறை நர்மதை நதிக்கரையோரமிருந்த வம்சாவளியினரின் பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்யச் சென்றோம். அப்போது இருவர் மட்டுமே செல்லும் படகில் மறுகரையை அடைந்தோம். பல இடங்களில் சுழன்று ஓடும் அதன் வேகம் அச்சுறுத்தியது.
சில நேரங்களில் படகுகள் நதியைக் கடப்பதற்குள் பிறவிப் பெருங்கடலைக் கடக்கச் செய்துவிடுகின்றன. அப்போது விழுந்த உடல்களை மீட்க உயிரைப் பணயம் வைத்து சிலர் பாய்வதுண்டு. இந்திரா சவுந்தரராஜன் எழுதிய ரங்கநதி என்கிற நாவல் அப்படிப்பட்ட பாத்திரத்தை மையமாக வைத்து எழுதப்பட்டது. புதைமணலில் சிக்கிக்கொள்கிற உடல்களை மீட்பதற்குப் பயிற்சியும், துணிச்சலும் வேண்டும். அப்படி உயிரையும் பொருட்படுத்தாது மீட்டவர் களிடம் ஐந்துக்கும் பத்துக்கும் பேரம் பேசும் ஜென்மங்களும் உண்டு.
ஒகேனக்கல்லில் பரிசல் சாய்ந்து விழுந்து இறந்தவர்களின் பிரேதங்களை மீட்பதற்குப் பிரத்யேகப் பயிற்சி பெற்றவர்கள் இருப்பதைக் கண்டேன். சில சிறுவர்கள் ஐம்பது ரூபாய் கொடுத்தால் தண்ணீருக்குள் அம்புபோல் பாய்வதைப் பார்த்தேன். வயிறு பெரிதாகும்போது உயிரு சிறிதாகிறது.
பாட்னாவிற்கருகில் கங்கையில் படகு ஒன்று கவிழ்ந்துபோனது. அப்போது தவறியவர்களை மீட்க ராஜேந்திரசானி என்கிற நபரை மாவட்ட நிர்வாகம் வரவழைத்தது. அவருக்கு வயது ஐம்பது இருக்கும். தண்ணீருக்குள் பாய்கிற அவரை மாவட்ட நிர்வாகம் பல்லாண்டுகளாகப் பயன்படுத்தி வந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்களை முழுகிப்போகாமல் காப்பாற்றியவர் அவர்.
தமிழில் பழமொழி ஒன்று உண்டு; ‘வெளியூர்க்காரன் பேய்க்குப் பயப்பட மாட்டான், உள்ளூர்க்காரன் தண்ணீருக்குப் பயப்பட மாட்டான்’. பழகியவர்களுக்கு பள்ளம் எங்கிருக்கிறது, நீர் எங்கு பல்லாங்குழி விளையாடுகிறது என்கிற விவரங்கள் தெரியும். ஆழமில்லாத இடங்களில் அவர்கள் அலட்சியமாகக் குதிப்பார்கள். எங்கு தண்ணீர் கழுத்துவரை என்பதை அறிவார்கள்.
பொதுவாகவே மீனவப் பெருஞ்சமுதாயம் நீரைக்கண்டால் நேசிக்கத் தொடங்கும். கடலைக் கண்ணெதிரிலேயே பார்ப்பதால் அவர்களுக்கு அலைகளைக் கண்டு பயமில்லை, ஆழத்தைக் கண்டு அச்சமில்லை. ராமேஸ்வரம் சென்றபோது அங்கிருக்கும் சின்னக் குழந்தைகளைப் பெற்றோர்கள் கடலில் வீசி விளையாடு வதைப் பார்த்தேன். அவை எளிதில் கரையை அடைகின்றன. அச்சமில்லாதபோது நீரோடும் கைகுலுக்கலாம், காற்றோடும் கை கலக்கலாம் என்பதற்கு அவர்கள் சாட்சி.
ராஜேந்திரசானி மீனவச் சமுதாயத்தில் பிறந்தவர். அவரும் அவர் குழுவினரும் அந்த விபத்தில் பல உயிர்களைக் காப்பாற்றியதோடு 17 சடலங்களையும் மீட்டனர். இத்தனைக்கும் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்தபோது எங்கும் கும்மிருட்டு. ஜனவரி மாதக் குளிர். உடனே குதித்து அவர் மட்டும் அறுவரை மீட்டார். அவருடைய குழுவைச் சார்ந்த 12 உறுப்பினர்களும் உள்ளே குதித்து உடல்களைத் தேடினர்.
உயிர் இருக்கும்வரை உடல். பின்பு அது சடலம். ஆழமான கங்கை நீரில் அவற்றைத் தேடுவது சிரமமாய் இருந்தது. மீனவர்கள் பயன்படுத்தும் தூண்டிலைக்கொண்டு உடல்கள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்தனர்.
விபத்து விளையாட்டாக நிகழ்ந்துவிடுகிறது. நமக்கொன்றும் ஆகாது என்கிற அசாத்திய துணிச்சலில் மக்கள் நகரப்பேருந்தில் ஏறுவதைப்போல படகுக்குள்ளும் பயணிக்கின்றனர். அந்தப் படகின் கொள்ளளவோ 25. அதில் 60 பேர் ஏறினால் அது எப்படி அனுசரிக்கும். இத்தனைக்கும் அது கிழட்டுப் படகு.
ராஜேந்திரசானி உயிர்களைக் காப்பாற்றுவதை மார்க்கமாகக் கொண்டவர். ‘இதுவே என் வழிபாடு’ என்று ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறார். ‘உயிருள்ள வரை உயிர்களைக் காப்பாற்றுவேன்’ என்கிறார். கண்ணால் பார்த்த இன்னொருவர் அவர் திறமையைப் பாராட்டி ‘இவர் மட்டும் இல்லாவிட்டால் இழப்புகள் இன்னும் அதிகமாகியிருக்கும். சின்னக் குழந்தைகளின் உடல்களும் படகிடுக்கில் சிக்கி மாண்டது பரிதாபம்’ என்று குறிப்பிடுகிறார்.
விழாவின்போது நடந்த விபத்து இது. விழாவே விபத்தானால் சிரிப்பே கண்ணீராகக் கற்பிக்கப்படும்.
கூட்டமாகச் சேர்ந்தால் எதைச் செய்தாலும் பாதிப்பு வராது என்ற கேளிக்கை மனப்பான்மையைத் தவிர்க்க வேண்டும் என்பதே இச்செய்தி தரும் சேதி.
(செய்தி தொடரும்)
பதற்றப்படாமல் இருந்தால் தப்பிக்கலாம்...
புதைமணல் என்பது மணலும், களிமண்ணும், தண்ணீரும் கலந்த கலவை. அது உண்மையில் ஆபத்தற்றது. மனிதனோ, விலங்கோ முழுவதுமாக அதில் மூழ்கிச் செத்துப்போக வாய்ப்பில்லை. காரணம், அதன் அடர்த்தி. புதைமணலின் அடர்த்தி ஒரு மில்லி மீட்டருக்கு இரண்டு கிராம். மனித உடலின் அடர்த்தியோ ஒரு கிராம் மட்டுமே. இடுப்புவரை இறங்குவதற்கு மட்டுமே வாய்ப்பு. ஆனால், பதற்றமடைந்து எம்பிக்குதிக்க முற்படும்போது ஆழமாய் உள்ளே சென்று விடுகிறார்கள். கால்களை வெகுவாக அசைத்து உடலைத் திருப்பினால் உயிர் பிழைக்க வாய்ப்புண்டு. பதற்றப்படாமல் இருந்தால் தப்பிக்கலாம். பயப்பட்டால் கடினம்.