அம்பத்தூர் ரெயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு என்ஜினீயர் பலி

அம்பத்தூர் ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்ற என்ஜினீயர், எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு பரிதாபமாக இறந்தார்.

Update: 2017-04-01 23:00 GMT

ஆவடி,

அம்பத்தூர் லெனின் நகர், 3–வது தெருவைச் சேர்ந்தவர் ஏசுதாஸ். இவருடைய மகன் ஆல்பர்ட் சேவியர்(வயது 25). என்ஜினீயரான இவர், சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

வழக்கம் போல் நேற்று காலை மின்சார ரெயிலில் வேலைக்கு செல்வதற்காக அம்பத்தூர் ரெயில் நிலையம் வந்த ஆல்பர்ட் சேவியர், அங்கு தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றார்.

எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி பலி

அப்போது சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த ஆல்பர்ட் சேவியர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த ஆவடி ரெயில்வே போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் நாராயணசாமி மற்றும் போலீசார், பலியான ஆல்பர்ட் சேவியர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்