பொன்னேரியில் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
டெல்லியில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற ஆதரவு தெரிவித்து கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
பொன்னேரி,
டெல்லியில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற ஆதரவு தெரிவித்து பொன்னேரியில் உள்ள கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.