ஆரல்வாய்மொழி அருகே காலி குடங்களுடன் பெண்கள் போராட்டம்
ஆரல்வாய்மொழி அருகே காலி குடங்களுடன் பெண்கள் போராட்டம்;
ஆரல்வாய்மொழி,
ஆரல்வாய்மொழி போலீஸ் சரகம் தாழக்குடி பேரூராட்சிக்கு உள்பட்ட சீதப்பால் மேலகுளத்தான்கரை பகுதியில் 20–க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் குடிநீர் வழங்குவதற்காக பேரூராட்சி சார்பில் 2 குடிநீர் நல்லி அமைக்கப்பட்டுள்ளது. அவற்றில் குடிநீர் சீராக வருவதில்லை எனக்கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு நல்லியை கழற்றி எடுத்து சென்று விட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பேரூராட்சி அதிகாரிகள் அந்த நல்லியில் இருந்து தண்ணீர் வராதவகையில் ‘சீல்’ வைத்தனர். இதனால், ஒரு நல்லியில் இருந்து மட்டும் தண்ணீர் வந்தது. இந்த தண்ணீர் அந்த பகுதி மக்களுக்கு போதவில்லை. அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து, நேற்று அந்த பகுதியில் உள்ள பெண்கள் சீராக குடிநீர் வழங்ககோரி, அந்த நல்லி முன்பு காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.