128 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன 18 ஓட்டல் மதுக்கூடங்களும் அடைப்பு
நெல்லை மாவட்டத்தில் நேற்று 128 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன. மேலும், ஓட்டல்களில் இயங்கி வந்த 18 மதுக்கூடங்களும் அடைக்கப்பட்டன.
நெல்லை,
தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலையை ஒட்டி உள்ள மதுக்கடைகளை அகற்றுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் இதுபோன்று உள்ள கடைகளை அகற்ற வேண்டும் இல்லை என்றால், 1–ந்தேதி(நேற்று) திறக்க கூடாது என்றும் உத்தரவிடப்பட்டது.
இதையொட்டி நெல்லை மாவட்டத்தில் நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள கடைகளை வேறு இடத்துக்கு மாற்ற அதிகாரிகள் முயற்சிகள் மேற்கொண்டு வந்தனர். ஆனால் பெரும்பாலான இடங்களில் கிராமப்புறங்களுக்கு செல்லும் ரோடுகளில் இந்த கடைகளை அமைக்க கூடாது என்று அந்தந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மாவட்ட கலெக்டரிடம் தங்களது எதிர்ப்பை மனுக்களாகவும் கொடுத்தனர்.
128 கடைகள்
இதனால் வேறு இடங்களுக்கு கடைகளை மாற்றுவதற்கு தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து நீதிமன்றம் உத்தரவுப்படி நேற்று நெடுஞ்ததாலை ஓரங்களில் இருந்த பெரும்பாலான மதுக்கடைகள் மூடப்பட்டன. நெல்லை மாவட்டத்தில் டாஸ்மாக் கட்டுப்பாட்டில் இருந்த 128 மதுக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த பார்கள், மற்றும் ஓட்டல்களுடன் இணைந்த உரிமம் பெற்ற 18 மதுபான கூடங்களும் நேற்று மூடப்பட்டன..
‘குடி’மகன்கள் தவிப்பு
நெல்லை மாநகரில் சந்திப்பு பஸ் நிலையம், எஸ்.என்.ஹைரோடு, வண்ணார்பேட்டை தெற்கு புறவழிச்சாலை, புதிய பஸ் நிலைய பகுதி, டவுன் காட்சி மண்டபம், அபிஷேகப்பட்டி, தச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அனைத்து மதுக்கடைகளும் நேற்று மூடப்பட்டு விட்டன. குறுக்குத்துறை, மகாராஜ நகர், தாழையூத்து உள்ளிபட 5 மதுக்கடைகள் மட்டுமே செயல்பட்டன.
இதை அறியாத ‘குடி’மகன்கள் நேற்று அருகில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு மதுவாங்க சென்றனர். ஆனால் அங்கு மதுக்கடையும், இணைந்திருந்த மதுபான கூடமும் மூடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ஒவ்வொரு கடையாக சுற்றித்திரிந்தும் மது கிடைக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். திறந்திருந்த ஒருசில கடைகளில் மது பாட்டில் வாங்குவதற்கு கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
மீண்டும் கடைகள்...
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘நெல்லை மாவட்டத்தில் டாஸ்மாக் கட்டுப்பாட்டில் 175 மதுக்கடைகள் உள்ளன. இதில் நெடுஞ்சாலை ஓரத்தில் இருக்கும் 128 மதுக்கடைகளும், அதனுடன் இணைந்த மதுபான கூடங்களும் மூடப்பட்டுள்ளன. இதுதவிர கலால் துறை அனுமதி பெற்று ரோட்டோரத்தில் உள்ள ஓட்டல்களில் இயங்கி வரும் 18 மதுபான கூடங்களும் மூடப்பட்டு விட்டன.
தற்போது உள்ள 128 மதுக்கடைகளையும், நீதிமன்ற வழிகாட்டுதல்படி பிரச்சினை இல்லாத இடங்களுக்கு 15 நாட்களுக்குள் மாற்றி விடுவோம். அதன் பிறகு அனுமதி கேட்டு கலெக்டருக்கு பரிந்துரை செய்வோம். அதன்படி அனுமதி கிடைக்கும் கடைகளை மட்டும் மீண்டும் திறப்போம்’’ என்றனர்