விசுவக்குடியில் ஜல்லிக்கட்டு சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 11 பேர் காயம்
விசுவக்குடியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 11 பேர் காயம் அடைந்தனர்.
வேப்பந்தட்டை,
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள விசுவக்குடியில் ஜல்லிக்கட்டு நடத்த முடிவு செய்து விழாக்குழுவினரும், பொதுமக்களும் அதற்கான ஏற்பாடுகளை செய்தனர். பின்னர் ஜல்லிக்கட்டு நடத்த மாவட்ட நிர்வாகத்திடம் முறையான அனுமதி கோரப்பட்டது. இதையடுத்து ஜல்லிக்கட்டு நடக்கும் வாடிவாசல் பகுதியை பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் கதிரேசன், துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், வேப்பந்தட்டை தாசில்தார் முத்துவீரன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்து அனுமதி வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து விசுவக்குடியில் நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது. முதலில் காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் அரசு டாக்டர்களை கொண்டு முறையான மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. பின்னர் வாடிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. இதில் 200-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டி போட்டு அடக்கினர். அப்போது பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். சில காளைகள் வீரர்களை தூக்கி வீசி பந்தாடியது.
11 பேர் காயம்
இதில் அன்னமங்கலம், தொண்டமாந்துறை, விசுவக்குடி, முகமதுபட்டிணம், திருச்சி மாவட்டம் இருங்கலூர், ஈச்சம்பட்டி, சேலம் மாவட்டம் தம்மம்பட்டி, கூடமலை, ஆத்தூர், கெங்கவல்லி, மங்கப்பட்டி உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்திருந்த 300-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
காளைகள் முட்டியதில் சேலம் மாவட்டம் கம்மம்பட்டியை சேர்ந்த சேகர் (வயது 23), பெரியம்மாபாளையத்தை சேர்ந்த மோகன்ராஜ் (33), அன்னமங்கலத்தை சேர்ந்த மதளைமுத்து (45), பூலாம்பாடியை சேர்ந்த கார்த்திக் (20), அருண் (24) உள்பட 11 பேர் காயம் அடைந்தனர். அவர் களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்து பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பரிசுப்பொருட்கள்
ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கு விழாக்குழுவினரால் வெள்ளி நாணயங்கள், சில்வர் பாத்திரங்கள், சைக்கிள், மின்விசிறி, வேட்டி, ரூ.5 ஆயிரம் வரை யிலான பணமுடிப்பு போன்ற பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன.
இதேபோல் வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த போட்டியில் அதிக காளைகளை அடக்கிய வீரருக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. அதேபோல் சிறந்த காளைகள் தேர்வு செய்யப்பட்டு அவற்றின் உரிமையாளர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.
தண்ணீர் பந்தல்
ஜல்லிக்கட்டு போட்டியை பெரம்பலூர், சேலம், நாமக்கல், திருச்சி, கடலூர், அரியலூர், வேப்பந்தட்டை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பொதுமக்கள் கண்டுகளித்தனர். கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பொதுமக்களுக்கு விழாக்குழு சார்பில் தண்ணீர் பந்தல் அமைத்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. பாதுகாப்பு பணியில் அரும்பாவூர் போலீசார் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.