சுங்கச்சாவடியை அகற்றக்கோரி போராட்டம் 8 பேர் கைது

சுங்கச்சாவடியை அகற்றக்கோரி போராட்டம் நடத்திய தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த 8 பேர் கைது

Update: 2017-04-01 22:30 GMT
நமணசமுத்திரம்,

புதுக்கோட்டை மாவட்டம் நமணசமுத்திரம் அருகே உள்ள லேணா விலக்கு சுங்கச் சாவடியை அகற்றக்கோரி தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் நேற்று அந்த சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த திருமயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன், சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்ட செயலாளர் ஸ்ரீதரன், மாவட்ட இளைஞரணி செயலாளர் மாரிமுத்து உள்பட 8 பேரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்