குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
காவல்காரன்பட்டியில் குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
தோகைமலை,
கரூர் மாவட்டம் தோகைமலை ஒன்றியம் வடசேரி ஊராட்சி காவல்காரன்பட்டியில் கடந்த 15 நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனை போக்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை மனு கொடுத்தனர். ஆனால் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று குடிநீர் வழங்கக்கோரி காவல்காரன்பட்டி பஸ் நிறுத்தம் அருகே தோகைமலை- திருச்சி சாலையில் பொதுமக்கள் காலி குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் பேச்சுவார்த்தை
இது குறித்து தகவல் அறிந்த தோகைமலை ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) மனோகரன், வடசேரி ஊராட்சி செயலாளர் கலியராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், காவல்காரன்பட்டியில் உள்ள மந்தையாயி அம்மன் கோவில் பகுதியில் கூடுதலாக காவிரி குடிநீர் குழாய்கள் அமைத்து குடிநீர் வினியோகம் செய்யப்படும். அதுவரை லாரிகள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படும். மேலும் காவல்காரன்பட்டி பகுதியில் நீரோட்ட நிபுணர் மூலம் நீர் இருக்கும் இடத்தை கண்டறிந்து புதியதாக ஆழ்குழாய் கிணறு அமைக்கப்படும் என்று கூறினர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் தோகைமலை- திருச்சி சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.