லாரிகள் வேலைநிறுத்த போராட்டம்: கோவில்பட்டி மார்க்கெட்டில் காய்கறிகள் விலை உயர்வு
கோவில்பட்டி நகரசபை தினசரி மார்க்கெட்டுக்கு ஒட்டன்சத்திரம், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, மதுரை உள்ளிட்ட இடங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.
கோவில்பட்ட
கோவில்பட்டி நகரசபை தினசரி மார்க்கெட்டுக்கு ஒட்டன்சத்திரம், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, மதுரை உள்ளிட்ட இடங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. தற்போது லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தினால் கோவில்பட்டி மார்க்கெட்டுக்கு காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதாலும், மேலும் காய்கறிகளைக் கொண்டு வருவதற்கு கூடுதல் வாகனங்களை பயன்படுத்துவதாலும் அதன் விலை உயர்ந்து உள்ளது.
கடந்த வாரம் ரூ.55–க்கு விற்ற ஒரு கிலோ கத்தரிக்காய் தற்போது ரூ.70 முதல் ரூ.80 வரையிலும், கிலோ ரூ.15–க்கு விற்ற பல்லாரி ரூ.25 முதல் ரூ.30 ஆகவும், கிலோ ரூ.40–க்கு விற்ற நாட்டு வெங்காயம் ரூ.60 ஆகவும், கிலோ ரூ.30–க்கு விற்ற சம்பா மிளகாய் ரூ.40 முதல் ரூ.45 ஆகவும், கிலோ ரூ.40–க்கு விற்ற குடை மிளகாய் ரூ.60 முதல் ரூ.65 ஆகவும், கிலோ ரூ.20–க்கு விற்ற தக்காளி ரூ.25 முதல் ரூ.30 ஆகவும் விலை உயர்ந்தது.– கிலோ ரூ.20–க்கு விற்ற வெண்டைக்காய், சீனி அவரைக்காய் ஆகியவை ரூ.25 ஆகவும், கிலோ ரூ.80–க்கு விற்ற பீன்ஸ் ரூ.90 முதல் ரூ.95 ஆகவும், கிலோ ரூ.30–க்கு விற்ற சவ்சவ் ரூ.40 முதல் ரூ.45 ஆகவும், கிலோ ரூ.35–க்கு விற்ற காளிபிளவர் ரூ.50 முதல் ரூ.55 ஆகவும், கிலோ ரூ.75–க்கு விற்ற பச்சை பட்டாணி ரூ.90 முதல் ரூ.95 ஆகவும், கிலோ ரூ.130 க்கு விற்ற பட்டர் பீன்ஸ் ரூ.150 ஆகவும் விலை உயர்ந்துள்ளது என்று வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.