தூத்துக்குடியில் தொழிலாளியை கொலை செய்ய முயன்ற ரவுடி கைது
தூத்துக்குடி பிரையன்ட் நகரை சேர்ந்த ராஜ் மகன் முத்துகுமார் (வயது 35). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் வேலைக்கு செல்வதற்காக தெர்மல்நகர் முத்துநகரில் நின்று கொண்டிருந்தாராம்.;
தூத்து
தூத்துக்குடி பிரையன்ட் நகரை சேர்ந்த ராஜ் மகன் முத்துகுமார் (வயது 35). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் வேலைக்கு செல்வதற்காக தெர்மல்நகர் முத்துநகரில் நின்று கொண்டிருந்தாராம். அங்கு வந்த தூத்துக்குடி– திருச்செந்தூர் ரோட்டை சேர்ந்த ரவுடி சங்கர் (42) என்பவர், முத்துகுமாரை வழிமறித்து, தகராறு செய்ததாக கூறப்படுகிறது. மேலும் ஆத்திரம் அடங்காத சங்கர் தான் வைத்து இருந்த அரிவாளால் முத்துகுமாரை வெட்டிக் கொலை செய்ய முயன்றுள்ளார்.
இந்த தாக்குதலில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய முத்துகுமார் தெர்மல்நகர் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் சங்கர் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். கைதான சங்கர் மீது தூத்துக்குடியில் உள்ள போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன.