‘தினத்தந்தி’ மற்றும் ‘வசந்த் அன் கோ’ இணைந்து நடத்தும் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி–விற்பனை

‘தினத்தந்தி’, ‘வசந்த் அன் கோ’ இணைந்து நடத்தும் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி–விற்பனை சென்னையில் நேற்று தொடங்கியது.

Update: 2017-03-31 23:30 GMT
சென்னை,

‘தினத்தந்தி’, ‘வசந்த் அன் கோ’ இணைந்து நடத்தும் ‘குளோபல் ஹோம் புராடக்ட்ஸ் எலக்ட்ரானிக்ஸ் எக்ஸ்போ’ எனும் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பர்னிச்சர் கண்காட்சி–விற்பனை சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நேற்று தொடங்கியது.

கண்காட்சி–விற்பனையை ‘வசந்த் அன் கோ’ நிறுவனத்தின் உரிமையாளர் எச்.வசந்தகுமார், அவருடைய மனைவி தமிழ்செல்வி, மகன் விஜய்
வசந்த் ஆகியோர் ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

நேற்று தொடங்கிய இந்த கண்காட்சி–விற்பனை நாளை மறுதினம் (திங்கட்கிழமை) வரை 4 நாட்கள் நடக்கிறது. காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம். அனுமதி இலவசம்.

முன்னணி நிறுவனங்கள்

கண்காட்சி–விற்பனையில் எல்.ஜி., சாம்சங், சோனி, பிலிப்ஸ், வேர்ல்பூல், கோத்ரேஜ், ஹையர், பானசோனிக், வீடியோகான், டைகின், ஐ.எப்.பி., பிரீத்தி, பஜாஜ், பட்டர்பிளை, ஒனிடா, விடியம் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் இடம்பெற்றுள்ளன.

தற்போது கோடைக்காலம் என்பதால் ஏ.சி.க்கள் அதிகளவில் விற்பனைக்காக கண்காட்சியில் குவிக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்களின் எண்ணங்களுக்கு ஏற்றாற்போல், பல்வேறு வண்ணங்களில், டிசைன்களில் ஏ.சி.க்கள் உள்ளன.

பல்வேறு அரங்குகளில் வீட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் ஒரே இடத்தில் நிறைவாய் பொதுமக்கள் வாங்குவதற்கு ஏற்ற வகையில் இந்த கண்காட்சி–விற்பனை ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

சிறப்பு சலுகைகள்

இதுகுறித்து ‘வசந்த் அன் கோ’ நிறுவனத்தின் உரிமையாளர் எச்.வசந்தகுமார் கூறியதாவது:–

வெளிநாடுகளில் அறிமுகம் செய்யப்பட்ட எல்லா தரப்பு முன்னணி நிறுவனங்களின் தயாரிப்புகள் இந்த கண்காட்சியில் உள்ளன. எல்லா வகையான மாடல்களையும், அதனுடைய தரத்தையும் நேரடியாக பார்த்து வாடிக்கையாளர்கள் தங்களுடைய தேவைக்கேற்றாற்போல் பொருட்களை இந்த கண்காட்சியில் வாங்கலாம்.

அதற்கு தகுந்த வகையில் யாரும் கொடுக்க முடியாத அளவுக்கு விலை குறைவாகவும், ஏராளமான சலுகைகளும் வழங்குகிறோம். 4 நாட்கள் நடக்கும் இந்த கண்காட்சியை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி தங்களுக்கு தேவையான எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பர்னிச்சர் பொருட் களை வாங்கி செல்லலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பைனான்ஸ் வசதி

கிரெடிட் கார்டை பயன்
படுத்தி பஜாஜ் பைனான்ஸ் மூலம் பொருட்கள் வாங்குபவர்களுக்கு 100 சதவீதம் வரையிலும் ‘கேஷ் பேக் ஆபர்’ வசதி உள்ளது. பஜாஜ் பின்செர்வ் மற்றும் இ.எம்.ஐ. கார்டு வைத்திருப்பவர்களுக்கு 3 நிமிடத்தில் ரூ.3 லட்சம் வரை உடனடி பைனான்ஸ் வசதி செய்யப்படும்.

ரூ.1 மட்டும் செலுத்தி ஏ.சி., எல்.இ.டி., பிரிட்ஜ், வாஷிங் மெஷின், மைக்ரோவேவ் ஓவன் போன்றவற்றை வாங்கலாம். குறிப்பிட்ட மாடல்களுக்கு வட்டி இல்லை. பிராசஸிங் கட்டணமும் இல்லை.

கோடைக்கால
சிறப்பு தள்ளுபடி

* குறிப்பிட்ட மாடல்களுக்கு 50 சதவீதம் தள்ளுபடி.

* அனைத்து மாடல் ஏ.சி.க்களுடன் ரூ.3 ஆயிரத்து 990 மதிப்புள்ள ‘சவுபாக்யா’ 2 பர்னர் கிளாஸ் டாப் கியாஸ் ஸ்டவ் காம்போ ஆபர் மூலம் மிகக்குறைந்த விலையில் பெற்றுச்செல்லலாம்.

* ஒரு ஏ.சி. வாங்கினால் தள்ளுபடி விலையுடன் ரூ.1,000 கூடுதல் தள்ளுபடியும், 2 ஏ.சி.க்கள் வாங்கினால் தள்ளுபடி விலையுடன் ரூ.3 ஆயிரம் கூடுதல் தள்ளுபடியும், 3 ஏ.சி.க்கள் வாங்கினால் தள்ளுபடி விலையுடன் ரூ.5 ஆயிரம் கூடுதல் தள்ளுபடியும் பெறலாம்.

* வருட முடிவு ஆபராக செமி ஆட்டோமெட்டிக் வாஷிங் மெஷின் ரூ.7 ஆயிரத்து 990 முதல், புல்லி ஆட்டோமெட்டிக் வாஷிங் மெஷின் ரூ.11 ஆயிரத்து 490 முதல், மைக்ரோவேவ் ஓவன் ரூ.4 ஆயிரத்து 90 முதல் கிடைக்கிறது. மேலும், ரூ.7 ஆயிரத்து 790 மதிப்புள்ள பேபர் 3 பர்னர் கிளாஸ் டாப் கியாஸ் ஸ்டவ் ரூ.3 ஆயிரத்து 990 மட்டுமே.

* ரூ.22 ஆயிரம் மதிப்புள்ள பேபர் சிம்னி ரூ.14 ஆயிரத்து 990 மட்டுமே.

* காம்போ ஆபரில் அனைத்து மாடல் எல்.இ.டி. டி.வி.க்களுடன் ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள பிலிப்ஸ் சவுண்ட்பார் வித் சப்வூபர் செட்டுகளை ரூ.4 ஆயிரம் மட்டுமே செலுத்தி பெற்று செல்லலாம்.

* ரூ.12 ஆயிரத்து 490 மதிப்புள்ள கிளாஸ் டாப் கியாஸ் ஸ்டவ், ‘கிராம்டன்’ புல்லி ஆட்டோமெட்டிக் மிக்சி இரண்டும் சேர்த்து சிறப்பு காம்போ விலையில் ரூ.4 ஆயிரத்து 290 மட்டுமே.

* வாடிக்கையாளர்கள் வாங்கும் பொருட்களுடன் சன் டைரக்ட், டாடா ஸ்கை, டிஷ் டி.வி., ஏர்டெல் டிஜிட்டல் டி.வி. வீடியோகான் போன்ற பல்வேறு விதமான டி.டி.எச். இலவசமாக பெறலாம். ஆக்டிவே‌ஷன் மற்றும் பொருத்தும் கட்டணம் தனி.

* உலகத்தரம் வாய்ந்த பர்னிச்சர்கள் 0 சதவீதம் வட்டியில், 0 சதவீதம் முன்பணத்தில், 25 சதவீதம் தள்ளுபடி விலையில் வழங்கப்படுகிறது.

* சிறப்பு விலையில் சோபா ரூ.5 ஆயிரத்து 995 மட்டுமே.

* ரூ.100 மட்டும் செலுத்தி ஆர்.ஓ. வாட்டர் பியூரிபயர் எடுத்து செல்லலாம்.

* தரமான முன்னணி பிராண்டுகளின் ஏர் கூலர்கள் மிகக்குறைந்த அதிரடி விலையில் கிடைக்கும்.

மேலும் செய்திகள்