காஞ்சீபுரம், திருவள்ளூரில் எச்.ராஜாவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜாவை கண்டித்து காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சீபுரம்,
காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தியை அவதூறாக பேசிய பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜாவை கண்டித்து காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியை அவதூறாக பேசிய பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜாவை கண்டித்து காஞ்சீபுரம் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் காஞ்சீபுரம் காந்திரோடு பெரியார் தூண் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர காங்கிரஸ் கட்சி தலைவர் ஆர்.வி.குப்பன் தலைமை தாங்கினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் காஞ்சீபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் சுந்தரமூர்த்தி, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் அவளூர் சீனிவாகன், வக்கீல் சத்தியநாராயணன், ஆறுமுகம், குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
திருவள்ளூர்
திருவள்ளூரில் எச்.ராஜா வுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி அலுவலகம் அருகே நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திருவள்ளூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ஏ.ஜி.சிதம்பரம் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர்கள் அருள்மொழி, ஆனந்தன், நகர தலைவர் மோகன்தாஸ், வட்டார தலைவர் பழனி, நிர்வாகிகள் வெங்கடேஷ், மகேந்திரன், சரஸ்வதி, ராமுலு, மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 100–க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன கோஷங் களை எழுப்பினார்கள்.
பின்னர் அவர்கள் திடீரென எச்.ராஜாவின் உருவபொம்மை மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தண்ணீரை ஊற்றி அணைத்து காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் 120 பேரை கைது செய்து திருவள்ளூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.