பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜாவை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜாவை கண்டித்து ஈரோட்டில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

Update: 2017-03-31 23:00 GMT

ஈரோடு,

பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா சமீபத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியாகாந்தி குறித்து அநாகரீகமான கருத்துகள் தெரிவித்தார். இது காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. எச்.ராஜாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவருக்கு கண்டனம் தெரிவித்தும் தமிழகம் முழுவதும் காங்கிரசார் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். அதன்படி ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஈரோடு காந்திஜி ரோடு ஜவான் பவன் (முன்னாள் படைவீரர் அலுவலகம்) முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு ஈரோடு மாநகர் மாவட்ட தலைவர் ஈ.பி.ரவி தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட தலைவர் வக்கீல் காந்தி, வடக்கு மாவட்ட தலைவர் எஸ்.வி.சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் எச்.ராஜாவுக்கு எதிராக கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. கட்சியின் மாநில நிர்வாகிகள் பி.என்.நல்லசிவம், கே.எம்.பாலசுப்பிரமணியம், சித்ராவிஸ்வநாதன், வி.எம்.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட நிர்வாகிகள் ஜெ.சுரேஷ், ஈ.ஆர்.ராஜேந்திரன், ராஜேஸ், விஜய கண்ணா, ஞானசேகரன், உதயகுமார், கே.என்.பாட்ஷா, முகமது அர்சத், பவானி வட்டார நிர்வாகி கே.ஆர்.பூபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்