வானில் இருந்து விழுந்த மர்ம பொருள் வெடித்ததில் உடல் கருகிய பெண் சிகிச்சை பலனின்றி சாவு
வாணியம்பாடி அருகே வானில் இருந்து விழுந்த மர்ம பொருள் வெடித்ததில் உடல் கருகிய பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
வாணியம்பாடி,
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள துரிஞ்சிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 45). ஓசூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி புவனேஸ்வரி (40). இவர், தனது மகள்கள் பவித்ரா (20), அஸ்வினி (18), கீதாஞ்சலி (15) ஆகியோருடன் கடந்த 24-ந் தேதி இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.
மறுநாள் அதிகாலை 4 மணி அளவில் புவனேஸ்வரி வீட்டின் முன்புறமாக போடப்பட்டிருந்த சிமெண்டு கூரை (ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்) பகுதிக்கு வந்தார். அப்போது திடீரென வானத்தில் இருந்து ஒளியுடன் இறங்கிய மர்ம பொருள் ஒன்று சிமெண்டு கூரை மீது விழுந்து பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் சிமெண்டு கூரை முற்றிலுமாக உடைந்து விழுந்தது.
உடல் கருகிய பெண் சிகிச்சை பலனின்றி சாவு
இதில் புவனேஸ்வரி உடல் கருகினார். பலத்த தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய அவரை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து ஆலங்காயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.