திருச்சுழி திருமேனிநாதசாமி கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

திருச்சுழியில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட திருமேனிநாதசாமி கோவில் உள்ளது.

Update: 2017-03-31 18:42 GMT
திருச்சுழி

திருச்சுழியில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட திருமேனிநாதசாமி கோவில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம் நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி கொடி வீதியுலா கொண்டு செல்லப்பட்டு கோவிலை அடைந்து பின்னர் கொடியேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து சாமி, அம்பாளுக்கும், கொடிமரத்திற்கும் தீப ஆராதனைகள் நடைபெற்றன. இதனை கோவில் பட்டர்கள் செய்தனர். வருகிற 9-ந் தேதி வரை நடைபெறும் இந்த திருவிழாவில் தினமும் பல்வேறு வாகனங்களில் திருமேனிநாதர், பிரியாவிடை, துணை மாலையம்மன் ஆகியோர் எழுந்தருளி வீதியுலா வந்து அருள்பாலிக்கின்றனர். விழாவில் வருகிற 7-ந் தேதி மாலை 6 மணி முதல் 8.30 மணிக்குள் திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து வீதியுலா நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 8-ந்தேதி காலை 7 மணி முதல் 9 மணிக்குள் நடைபெறுகிறது. வருகிற 9-ந் தேதி தீர்த்தவாரியுடன் விழா நிறைவு பெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் சார்பில் கோவில் சரக அலுவலர் விக்னேஷ்வரன் தலைமையில் கோவில் பணியாளர்கள், பட்டர்கள் செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்