கார் கவிழ்ந்து விபத்து படுகாயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி சாவு மகன் இறந்த 2 வது நாளில் உயிரிழந்த பரிதாபம்

ஒரத்தநாடு பருத்தியப்பன் கோவில் அருகே உள்ள தலையாமங்கலத்தை சேர்ந்த

Update: 2017-03-31 22:30 GMT

சேதுபாவாசத்திரம்,

ஒரத்தநாடு பருத்தியப்பன் கோவில் அருகே உள்ள தலையாமங்கலத்தை சேர்ந்த 3 குடும்பங்களை சேர்ந்த 13 பேர் கடந்த 28–ந் தேதி நள்ளிரவு சேதுபாவாசத்திரம் கிழக்கு கடற்கரை சாலை வழியாக ராமேசுவரம் கோவிலுக்கு சென்றனர். சுப்பம்மாள் சத்திரம் அருகே வேன் சென்ற போது நிலை தடுமாறி சாலையிலிருந்து விலகி அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் திருவையாறு அருகே உள்ள அல்லூர் பகுதியை சேர்ந்த கார் உரிமையாளரும் டிரைவருமான திருமாவளவன் (30), பருத்திகோட்டையை சேர்ந்த செந்தில்குமார்(25) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த அதே பகுதியை சேர்ந்த சின்னையன் (47), கிருஷ்ணவேணி (42), பொன்னாப்பூர் கர்ணன்(16) உள்பட 11 பேர் தஞ்சை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்தநிலையில் கிருஷ்ணவேணி(42) சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இவர் ஏற்கனவே இந்த விபத்தில் பலியான செந்தில்குமாரின் தாய் என்பது குறிப்பிடத்தக்கது. வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த செந்தில்குமார் அவர் பலியாவதற்கு 15 நாட்களுக்கு முன்பு தான் வெளிநாட்டில் இருந்து அவரது சொந்த ஊருக்கு வந்தார். இது குறித்து சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்கள். விபத்தில் மகன் இறந்த 2– வது நாளில் தாயும் உயிரிழந்தது தலையாமங்கலம் பகுதி மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

மேலும் செய்திகள்