தர்மபுரியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் எச்.ராஜாவின் உருவ பொம்மை எரிப்பு
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை விமர்சித்து பேசிய பா.ஜனதா கட்சி நிர்வாகி எச்.ராஜாவை கண்டித்து
தர்மபுரி,
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை விமர்சித்து பேசிய பா.ஜனதா கட்சி நிர்வாகி எச்.ராஜாவை கண்டித்து தர்மபுரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் தர்மபுரியில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜாராம் வர்மா தலைமை தாங்கினார். நிர்வாகிகள் நாகராஜன், சித்தையன், ராஜவீரப்பன், செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு எச்.ராஜாவை கண்டித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினார்கள். அப்போது எச்.ராஜாவின் உருவ பொம்மையை அவர்கள் எரித்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சண்முகம், அன்பழகன், ஜெயகாந்தன், மணிகண்டன் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.