டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தர்மபுரியில் ஆர்ப்பாட்டம்

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்

Update: 2017-03-31 22:45 GMT

தர்மபுரி,

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், விவசாயிகள் வாங்கிய வங்கி கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். கால்நடைகளுக்கு இலவச தீவனம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தர்மபுரி தொலைபேசி நிலையம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மல்லையன், பொருளாளர் குப்புசாமி, மாவட்ட நிர்வாகிகள் தீர்த்தகிரி, சின்னசாமி, கணேசன், சின்னராசு, ஏழுமலை, தங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினர். இதில் விவசாயிகள் சங்கத்தினர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினர்.

மேலும் செய்திகள்