எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு நிலுவைத்தொகை 15–ந் தேதிக்குள் வழங்கப்படும் தனி அதிகாரி தகவல்

எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு நிலுவைத்தொகை வருகிற 15–ந் தேதிக்குள் வழங்கப்படும்

Update: 2017-03-31 22:45 GMT

சேத்தியாத்தோப்பு,

சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2016–17–ம் ஆண்டின் அரவை கடந்த டிசம்பர் மாதம் தொடங்கியது. இங்கு ஒரு நாளைக்கு 2 ஆயிரத்து 500 டன் வரை கரும்பு அரவை செய்யப்பட்டு வருகிறது. மேலும் கடந்த 2014–15 மற்றும் 2015–16–ம் ஆண்டு அரவை பருவத்தில் நிலுவைத்தொகையை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதை தொடர்ந்து தமிழ்நாடு கரும்பு விவசாய சங்க நிர்வாகிகள் ஆலையின் தனி அதிகாரி மணிமேகலையுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் விவசாயிகள் ஆதிமூலம், மாநில துணை செயலாளர் உதயக்குமார், துணை தலைவர் காமராஜ், ராதாகிருஷ்ணன், தங்கமணி, சண்முகம், அரவான், முரளி உள்பட கரும்பு விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

15–ந் தேதிக்குள் வழங்கப்படும்

இதனை தொடர்ந்து ஆலையின் தனி அதிகாரி மணிமேகலை கூறுகையில், கடந்த ஆண்டு 2014–15 அரவை பருவ நிலுவைத்தொகை மற்றும் 2015–16 அரவை பருவத்தின் நிலுவைத்தொகை ஆகியவற்றுக்காக தமிழக அரசிடம் இருந்து வழிவகை கடன் பெற்று கரும்பு விவசாயிகளுக்கு வருகிற 15–ந் தேதிக்குள் வழங்கப்படும். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

மேலும் செய்திகள்