கிருஷ்ணகிரியில், காங்கிரஸ் கட்சியினர் எச்.ராஜாவின் உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம்

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் சோனியா காந்தியை பற்றி தரக்குறைவாக பேசியதாக பா.ஜனதாவின்

Update: 2017-03-31 23:00 GMT

கிருஷ்ணகிரி,

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் சோனியா காந்தியை பற்றி தரக்குறைவாக பேசியதாக பா.ஜனதாவின் தேசிய செயலாளர் எச்.ராஜாவை கண்டித்து கிருஷ்ணகிரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. கிருஷ்ணகிரி லண்டன்பேட்டையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிருஷ்ணகிரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜேசு துரைராஜ் தலைமை தாங்கினார். நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரகமத்துல்லா வரவேற்று பேசினார்.

பிரசார குழு தலைவர் கோவிந்தசாமி, முன்னாள் மாவட்ட தலைவர் நாராயணமூர்த்தி, மாவட்ட துணை தலைவர்கள் டாக்டர் தகி, பி.சி.சேகர், எஸ்.சி. எஸ்.டி. பிரிவு தலைவர் ஆறுமுகம், சுப்பிரமணி, வர்த்தக காங்கிரஸ் தலைவர் முபாரக், விவசாய அணி ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் எச்.ராஜாவை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும் அவரது உருவ பொம்மை தீ வைத்து எரிக்கப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர்கள் சிவராஜ், கோவிந்தன், சாந்தம்மா, வட்டார தலைவர்கள் கோபால கிருஷ்ணன், ஆனந்தன், நகர நிர்வாகிகள் பாபு. இர்பான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்