கானாடுகாத்தான் பகுதியில் நாளை மறுநாள் மின்தடை
காரைக்குடி அருகே உள்ள கானாடுகாத்தான் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள்(3–ந் தேதி) மாதாந்திர பாராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
காரைக்குடி,
காரைக்குடி அருகே உள்ள கானாடுகாத்தான் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள்(3–ந் தேதி) மாதாந்திர பாராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதைதொடர்ந்து ஸ்ரீராம்நகர், கோட்டையூர், வேலங்குடி, பள்ளத்தூர், செட்டிநாடு, கானாடுகாத்தான், நேமத்தான்பட்டி, கொத்தமங்கலம், ஒ.சிறுவயல், ஆத்தங்குடி, பலவான்குடி, நெற்புகப்பட்டி, ஆவுடைப்பொய்கை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது என்று செயற்பொறியாளர் சித்தி அப்துல்காதர் தெரிவித்துள்ளார்.