புதுவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன பொதுக்கூட்டம்

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் முத்துக்கிருஷ்ணன் மர்ம மரணத்திற்கு நியாயம் கேட்டு புதுவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோ‌ஷமிட்டனர். இதனை கண்

Update: 2017-03-28 22:30 GMT

புதுச்சேரி,

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் முத்துக்கிருஷ்ணன் மர்ம மரணத்திற்கு நியாயம் கேட்டு புதுவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோ‌ஷமிட்டனர். இதனை கண்டிக்கும் வகையில் பா.ஜ.க.வினர் கம்யூனிஸ்டு கட்சிகளின் கொடியை தீ வைத்து எரித்தனர்.

இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் புதுச்சேரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று மாலை சாரம் அவ்வை திடலில் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நகர செயலாளர் மதிவாணன் தலைமை தாங்கினார்.

உழவர்கரை கமிட்டி செயலாளர் நடராஜன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கட்சியின் மாநில குழு உறுப்பினர் ராமமூர்த்தி, மாநில செயலாளர் ராஜாங்கம், தமிழ்மாநில குழு உறுப்பினர் பெருமாள், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் விசுவநாதன் உள்பட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்