நெல்லையில் கராத்தே செல்வின் நினைவு நாள் அனுசரிப்பு
கராத்தே செல்வின் நினைவு நாளையொட்டி நெல்லை பெருமாள்புரத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் பல்வேறு அமைப்பினர் அஞ்சலி செலுத்தினார்கள்.;
நெல்லை,
கராத்தே செல்வின் 20-வது நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி நெல்லை பெருமாள்புரத்தில் உள்ள நினைவிடத்தில் கராத்தே செல்வினின் மனைவி வயோலா அஞ்சலி செலுத்தினார்.
கராத்தே செல்வின் நாடார் நற்பணி இயக்க நிறுவன தலைவர் செட்டிகுளம் ராஜ் நாடார், வைகுண்டம், ஸ்டான்லி, முத்துகிருஷ்ணன், ஏசு நாடார், ரஞ்சித், தினேஷ், எட்வர்ட், ஜெபமணி, சவுந்தர், சிவா, கலை ஈஸ்வரன், ஆல்பட், முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கராத்தே செல்வின் நாடார் நற்பணி இயக்கம் சார்பில் பாளையங்கோட்டை பிஷப் சார்ஜென்ட் மன வளர்ச்சி குன்றியோர் விடுதியில் அன்னதானத்தை வயோலா தொடங்கி வைத்தார்.
சசிகலா புஷ்பா எம்.பி.
கராத்தே செல்வின் நினைவிடத்தில் அரசியல் கட்சியினர் மற்றும் சமுதாய அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் அஞ்சலி செலுத்தினார்கள். சசிகலா புஷ்பா எம்.பி., பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், நெல்லை தட்சணமாற நாடார் சங்க தலைவர் சபாபதி நாடார், சங்க நிர்வாக சபை இயக்குனர் தங்கவேலு, முருகேசன், மாரியப்பன், சண்முக நாதன், ராஜசேகர், அகில இந்திய நாடார் சமுதாய பேரவை துணை தலைவர் கப்பல் கே.ராஜா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
சமத்துவ மக்கள் கழக நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் அந்தோணி தாஸ், அவைத்தலைவர் கொடிமுத்து, வக்கீல் அணி அருணகிரி மற்றும் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.
கராத்தே செல்வின் நினைவு நாளையொட்டி நெல்லை பெருமாள்புரம் பகுதியில் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் விவேகானந்தன் தலைமையில் கராத்தே செல்வின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. மாநில துணை பொது செயலாளர்கள் சுந்தர், ஈஸ்ரவன், இளைஞர் அணி செயலாளர் பிரான்சிஸ் அந்தோணி ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.