டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை

தனியாருக்கு சொந்தமான இடத்தில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை

Update: 2017-03-24 22:30 GMT

திருப்போரூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூரை அடுத்த ஆலத்தூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்கப்பட உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு கோ‌ஷங்களை எழுப்பினர். முற்றுகையில் ஈடுபட்டவர்கள் கூறும்போது:–

இந்த பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டால் வாக்காளர் அடையாள அட்டை, ரே‌ஷன்கார்டு போன்றவற்றை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைப்போம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்