விளைபொருட்களுக்கு லாபகரமான விலை நிர்ணயம் செய்யக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

விளைபொருட்களுக்கு லாபகரமான விலை நிர்ணயம் செய்யக்கோரி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Update: 2017-03-21 22:00 GMT

திண்டுக்கல்

திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே பாரதீய கிசான் (விவசாயிகள்) சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் சுந்தரராஜன் முன்னிலை வகித்தார். தேசிய செயலாளர் பெருமாள், மலைத்தோட்ட விவசாய அணி மாநில செயலாளர் அசோகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர். அப்போது, கொடைக்கானல் மலைப்பகுதியில், யானை, காட்டெருமைகள் விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. எனவே இதற்கான நடவடிக்கையை மாநில அரசு தொடங்க வேண்டும்.

கொடைக்கானல் வன உயிரின சரணாலய திட்டத்தை கைவிட வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும், தமிழக விவசாயிகளை அழைத்து சென்று வருகிற 10–ந்தேதி டெல்லி ஜந்தர்மந்தரில் போராட்டம் நடத்தப்படும் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர். இதில், விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்