குடிபோதையில் சாக்கடை கால்வாய்க்குள் தவறி விழுந்த தொழிலாளி சாவு

சென்னிமலை அருகே குடிபோதையில் சாக்கடை கால்வாய்க்குள் தவறி விழுந்த தொழிலாளி சாவு

Update: 2017-03-21 21:15 GMT

சென்னிமலை

திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேச்ந்தவர் ஏகாம்பரம் (வயது 43). கூலித்தொழிலாளி. இவர் சென்னிமலை அருகே அண்ணா நகரில் உள்ள தனது தங்கை பானுமதி வீட்டில் தங்கி இருந்து உப்புலிபாளையத்துக்கு கூலி வேலைக்கு சென்று வந்தார். மேலும் இவருக்கு குடிப்பழக்கம் உண்டு. இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் சைக்கிளில் வேலைக்கு சென்று உள்ளார். அப்போது அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. சென்னிமலையில் அறச்சலூர் ரோட்டில் உள்ள கோவிலின் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி சைக்கிளில் இருந்து தவறி அருகில் இருந்த சாக்கடை கால்வாய்க்குள் விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுபற்றி அறிந்ததும் சென்னிமலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஏகாம்பரத்தின் உடலை கைப்பற்றி பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்