காட்டுமன்னார்கோவில் அருகே பரபரப்பு 3½ வயது பெண் குழந்தை மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்த தந்தை குடிபோதையில் வெறிச்செயல்

காட்டுமன்னார்கோவில் அருகே திருநாரையூர் மேலத்தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம்(வயது 36). தொழிலாளி.

Update: 2017-03-21 18:42 GMT

காட்டுமன்னார்கோவில்,

காட்டுமன்னார்கோவில் அருகே திருநாரையூர் மேலத்தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம்(வயது 36). தொழிலாளி. இவருக்கு 3½ வயதில் அனுசியா என்ற பெண் குழந்தை உள்ளாள். ஆறுமுகம் அடிக்கடி குடித்து விட்டு வீட்டிற்கு வந்து, அவரது குடும்பத்தினரிடம் தகராறில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று இரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்த ஆறுமுகம், தூங்கிக்கொண்டிருந்த தனது மகள் அனுசியா மீது மண்எண்ணெயை ஊற்றி திடீரென தீ வைத்ததாக தெரிகிறது. இதில் உடல்முழுவதும் தீப்பற்றி எரிய தொடங்கியது. இதில் கதறிய அனுசியாவை, அவரது குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் குமராட்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குடிபோதையில் மகள் மீது மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்