புதிய துறைமுக கொள்கை குறித்து மந்திரிகள், அதிகாரிகளுடன் பட்னாவிஸ் ஆலோசனை

புதிய துறைமுக கொள்கை குறித்து மந்திரிகள், அதிகாரிகளுடன் பட்னாவிஸ் ஆலோசனை நடத்தினார்.

Update: 2017-03-20 22:52 GMT

மும்பை,

புதிய துறைமுக கொள்கை நடைமுறை குறித்து மந்திரிகள் ராஜ்குமார் பட்டோலே, விஷ்ணு சவ்ரா, சமூக நீதித்துறை மற்றும் பிற துறைகளை சேர்ந்த அதிகாரிகளுடன் முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நேற்று மும்பையில் ஆலோசனை நடத்தினார். இதில், மாநகராட்சி அதிகாரிகளும் பங்கேற்றனர்.

அப்போது, துறைமுகங்கள் விரிவாக்கம் மற்றும் சாலை– ரெயில் தண்டவாளங்களை துறைமுகங்களுடன் இணைப்பது ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும், ஜெய்கார் துறைமுகம், கரஞ்சா டெர்மினல், யோக்யதான் துறைமுகம் மற்றும் கதாலே கப்பல் கட்டும் தளம் ஆகியவற்றின் மேம்பாடு பற்றியும் விவாதிக்கப்பட்டது.

அத்துடன் அம்பேத்கரின் 126–வது பிறந்தநாளையொட்டி மும்பை சைத்யாபூமியில் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வரும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தயார்நிலையில் வைக்குமாறு அதிகாரிகளுக்கு முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அறிவுறுத்தினார்.

மேலும் செய்திகள்