வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களின் மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்
மும்பை பல்கலைக்கழகம் தனது கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:–
மும்பை,
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களின் மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என மும்பை பல்கலைக்கழகம் தனது கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது.
இளம் வாக்காளர்கள்இந்திய மக்கள் தொகையில் 41 சதவீதம் பேர் இளைஞர்கள் என சமீபத்திய புள்ளி விவரங்கள் கூறுகின்றன. எனினும் இளைஞர்கள் ஆர்வமாக தேர்தலில் வாக்களிப்பது இல்லை. பலர் வாக்காளர் அடையாள அட்டை கூட பெற ஆர்வமில்லாமல் உள்ளனர். எனவே இளைஞர்கள் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் விதமாக தேர்தல் ஆணையம் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்தநிலையில் மும்பை பல்கலைக்கழகம் தனது கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:–
விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்அடுத்த கல்வி ஆண்டு முதல் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் நபரின் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என பார்க்கப்படும். அப்போது வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களின் மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த சுற்றறிக்கையை பல்கலைக்கழகத்தின் மாணவர் நலத்துறை, தேர்தல் ஆணையம், மாநில அரசின் பரிந்துரைப்படி வெளியிட்டதாக கூறப்படுகிறது.