மிரா – பயந்தர் மாநகராட்சியை சேர்ந்த 5 கவுன்சிலர்கள் சிவசேனாவில் இணைந்தனர்

மிரா பயந்தர் மாநகராட்சியை தற்போது பா.ஜனதா – சிவசேனா கூட்டணி ஆட்சி செய்து வருகிறது.

Update: 2017-03-20 22:45 GMT

மும்பை

மிரா பயந்தர் மாநகராட்சியை தற்போது பா.ஜனதா – சிவசேனா கூட்டணி ஆட்சி செய்து வருகிறது. இந்த மாநகராட்சியின் தற்போதைய பதவிக்காலம் சில மாதங்களில் முடிய உள்ளதை அடுத்து இதற்கு ஆகஸ்ட் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு தற்போதே சிவசேனா காய் நகர்த்த தொடங்கி உள்ளது. இதன் முன்ஏற்பாடாக நேற்று முன் தினம் மிரா–பயந்தர் மாநகராட்சியை சேர்ந்த 5 கவுன்சிலர்கள் உத்தவ் தாக்கரே முன்னிலையில் சிவசேனாவில் இணைந்தனர். இதில் தினேஷ் நலவாடே, ராஜூ வெடோஷ்கர் ஆகியோர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் ஆவர். அனிதா பாட்டீல், விகாஸ் பாட்டீல் ஆகியோர் தேசியவாத காங்கிரசை சேர்ந்தவர். அரவிந்த் தாக்கூர் நவநிர்மாண்சேனா கட்சிக்காரர் ஆவார்.

மேலும் செய்திகள்