கோரேகாவில் ஏ.டி.எம்.மில் ரூ.28½ லட்சம் கொள்ளையடித்த 2 பேர் கைது

ஏ.டி.எம்.மில் ரூ.28½ லட்சம் கொள்ளையடித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2017-03-20 22:44 GMT

மும்பை

ஏ.டி.எம்.மில் ரூ.28½ லட்சம் கொள்ளையடித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஏ.டி.எம்.மில் கொள்ளை

மும்பை கோரேகாவ் கிழக்கு, வன்ராய் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.பி.எப். கேம்ப் கேட் நுழைவாயில் பகுதியில் பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம். மையம் உள்ளது. கடந்த 15–ந் தேதி முகத்தை மூடிக் கொண்டு வந்த மர்மஆசாமிகள் 2 பேர் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்காமல் சாவியை பயன்படுத்தி திறந்து உள்ளே இருந்த ரூ.28 லட்சத்து 66 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றிருந்தனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து வன்ராய் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்கள் இருவரையும் வலைவீசி தேடினர்.

ஏ.டி.எம். சாவியை பயன்படுத்தி கொள்ளையடிக்கப்பட்டு இருந்ததால் இதில் பணம் நிரப்பும் நிதி மேலாண்மை நிறுவன ஊழியர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என கருதி போலீசார் அந்த வங்கியில் பணத்தை நிரப்பும் நிதி மேலாண்மை நிறுவன ஊழியர்கள் அனைவரது தகவல்கள் மற்றும் செல்போன் எண்களை வாங்கி சோதனை செய்தனர்.

2 பேர் கைது

போலீசார் நடத்திய விசாரணையில், அந்த நிறுவன மேலாளராக பணிபுரிந்து வந்த ஜக்தீஷ் பட்டேல் (35), ஊழியர் ரித்தேஷ் பர்கே (30) ஆகியோர் சில மாதங்களுக்கு முன் வேலையை விட்டு சென்றது தெரியவந்தது. அவர்களிடம் விசாரிக்க சென்ற போது, இருவரும் கொள்ளை சம்பவம் நடந்த அன்றே தங்களது சொந்த ஊரான சிந்துதுர்க்கிற்கு சென்றது தெரியவந்தது.

எனவே சந்தேகம் அடைந்த போலீசார் சிந்துதுர்க் சென்று இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் தான் ஏ.டி.எம்.மில் இருந்து தங்களிடம் உள்ள மாற்றுச்சாவியை பயன்படுத்தி பணத்தை இந்த திருட்டினர் என்பது தெரியவந்தது.

போலீசார் அவர்களிடம் இருந்த ரூ.21 லட்சத்து 63 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரும் மும்பை அழைத்து வரப்பட்டு தின்தோஷி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி அவர்களை 7 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்