வி‌ஷம் கலந்த நெல்லை தூவி மயில்களை கொன்ற விவசாயி கைது

சாலையோரம் உள்ள விவசாய நிலங்களில் 30–க்கும் மேற்பட்ட மயில்கள் நேற்று முன்தினம் இறந்து கிடந்தன.

Update: 2017-03-20 22:30 GMT

வானூர்,

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே கொண்டலாம்குப்பம் – தொள்ளாமூர் சாலையோரம் உள்ள விவசாய நிலங்களில் 30–க்கும் மேற்பட்ட மயில்கள் நேற்று முன்தினம் இறந்து கிடந்தன. தகவல் அறிந்த திண்டிவனம் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து, இறந்து கிடந்த மயில்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில், வி‌ஷம் கலந்த நெல்லை தூவி மயில்களை கொன்றது தெரியவந்தது.

இது குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி புதுவை மாநிலம் லிங்காரெட்டிப்பாளையம் அருகே புதுக்குப்பத்தை சேர்ந்த விவசாயி தேசிங் (வயது 62) என்பவரை கைது செய்தனர். விவசாய பயிர்களை சேதப்படுத்தியதால் நெல்லில் வி‌ஷம் கலந்து தூவி மயில்களை அவர் கொன்றது விசாரணையில் தெரியவந்தது.

மேலும் செய்திகள்