ஈரோட்டில் வணிகவரித்துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
வணிகவரித்துறை அதிகாரி தாக்கப்பட்டத்தை கண்டித்து ஈரோட்டில் வணிகவரித்துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
ஈரோடு,
சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வணிகவரித்துறை அதிகாரி தனபால் தாக்கப்பட்டத்தை கண்டித்து தமிழ்நாடு வணிகவரி பணியாளர்கள் சங்கம் சார்பில் ஈரோடு பிரப்ரோட்டில் உள்ள வணிகவரித்துறை அலுவலகம் முன்பு நேற்று மதியம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் சதீஸ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு வணிகவரி உதவி ஆணையாளர், வணிகவரி அலுவலர் மற்றும் துணை அலுவலர் சங்க மாநில செயலாளர் கதிர்வேல் கலந்துகொண்டு பேசினார். இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க மாவட்ட செயலாளர் மணிபாரதி மற்றும் வணிகவரித்துறை பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.