குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் நாகை கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் நாகை கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதில் பெண்கள் உள்பட 27 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாகப்பட்டினம்,
நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் தேமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட கொத்தமங்கலம் பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு கடந்த 15 நாட்களுக்கு மேலாக குடிநீர் வினியோகிக்கப்படவில்லை எனக்கோரியும், உடனே குடிநீர் வழங்கக்கோரியும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் நேற்று நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து முற்றுகையிட்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் தேமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட கொத்தமங்கலம் கிராமத்தில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வரவில்லை. இதனால் அவதியடைந்து வருகின்றோம். எனவே கொத்தமங்கலம் கிராமத்திற்கு தொடர்ந்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டரிடம் மனு கொடுக்க வந்துள்ளோம் என்று கூறி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
27 பேர் கைது
அதைதொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதாக 6 பெண்கள் உள்பட 27 பேரை நாகூர் போலீசார் கைது செய்தனர். கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் நாளில் பெண்கள் காலி குடங்களுடன் முற்றுகை யிட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.