இயற்கை எரிவாயு ஆழ்துளை கிணற்றில் ஏற்பட்ட வாயு கசிவு சரிசெய்யப்பட்டது
குருவாலப்பர் கோவில் கிராமத்தில் இயற்கை எரிவாயு ஆழ்துளை கிணற்றில் ஏற்பட்ட வாயு கசிவு சரிசெய்யப்பட்டது. மேலும் ஆழ்துளை கிணற்றை மூட கோரி போராட்டத்தில் ஈடுபட்ட 50 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
மீன்சுருட்டி,
அரியலூர் மாவட்டம் குருவாலப்பர் கோவில் கிராமத்தில் இயற்கை எரிவாயு உள்ளதா என சோதனை நடத்த ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மூலம் கடந்த 2013-ம் ஆண்டு ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. அந்த ஆழ்துளை கிணற்றில் இருந்து கடந்த 1-ந் தேதி அன்று எண்ணெய் மற்றும் வாயு கசிய தொடங்கியது. நேற்று முன்தினம் முதல் எண்ணெய் மற்றும் வாயு கசிவு அதிகமானது. இதனால் அப்பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் காரைக்காலில் உள்ள ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் பாதுகாப்பு பணி ஆய்வாளர் பத்மநாபன் தலைமையிலான குழுவினர் நேற்று குருவாலப்பர் கோவில் கிராமத்திற்கு வந்து ஆழ்துளை கிணற்றில் ஏற்பட்ட எண்ணெய் மற்றும் வாயு கசிவை சரி செய்தனர்.
நூதன போராட்டம்
இதற்கிடையே தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாய சங்க தலைவர் விஸ்வநாதன் தலைமையில் விவசாயிகள் உடலில் இலை, தழைகளை கட்டியவாறு வந்து எரிவாயு ஆழ்துளை கிணற்றுக்கு அருகில் நூதன போராட்டம் நடத்தினர். அப்போது ஆழ்துளை கிணற்றை மூடும்படி கோஷம் எழுப்பினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 50 பேரை போலீசார் கைது செய்து மீன்சுருட்டியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.