நிலம்-வீட்டுமனை விற்பனை ஆலோசகர்கள் உண்ணாவிரத போராட்டம்
பெரம்பலூரில் நிலம்-வீட்டுமனை விற்பனை ஆலோசகர்கள் உண்ணாவிரத போராட்டம்
பெரம்பலூர்,
ரியல் எஸ்டேட் தொழில் நலிவடைந்து வருவதை தடுக்க தமிழக அரசு வீட்டுமனை பத்திரப் பதிவிற்கான ஒருங்கிணைந்த திட்டத்தை உயர்நீதிமன்றத்தில் உடனே சமர்ப்பிக்க வேண்டும், பத்திரப்பதிவை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட நிலம்-வீட்டுமனை விற்பனை ஆலோசகர்கள் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் பெரம்பலூர் புதிய பஸ்நிலையத்தில் நேற்று நடந்தது. போராட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் சந்தோஷ்குமார் தலைமை தாங்கினார். பொருளாளர் சுப்ரமணியன் முன்னிலை வகித்தார். செயலாளர் சரவணசாமி வரவேற்றார். இதில் ரியல் எஸ்டேட் நிறுவன உரிமையாளர்கள் ஒஜீர், லட்சுமணன், முத்துசாமி, நில விற்பனை ஆலோசகர்கள் சரவணா, துரைசாமி, சிங்கப்பூர் ராஜா, ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.