ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க கோரி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு
தென்னங்குடியில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க கோரி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் கணேஷிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று கொண்டார். கூட்டத்தில் புதுக்கோட்டை ராஜகோபாலபுரம் பகுதியை சேர்ந்த தமிழ்செல்வன், அசோக்ராஜ் ஆகியோர் அளித்த மனுவில், புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா பெரம்பூர் வீரமாகாளியம்மன் கோவிலுக்கு நன்கொடையாக வரும் பணத்தை சிலர் ஒன்று சேர்ந்து பொய் கணக்கு காண்பித்து சில ஆண்டுகளாக மோசடி செய்து வருகின்றனர் இது குறித்து கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி
குளமாங்கல்ய நாடு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சார்பில் கொடுத்த மனுவில், உச்சாணி, புத்தாம்பூர், வாகவாசல், தென்னங்குடி, வைத்தூர், வச்சதானக்குறிச்சி, குட்டுக்காடு, இறையூர், மேக்குடிப்பட்டி ஆகிய ஊர்களை உள்ளடக்கியது குளமாங்கல்ய நாடு கிராமம். இங்குள்ள பொதுமக்கள் தென்னங்குடி முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை நடத்த முடிவு செய்துள்ளனர். எனவே திருவிழாவையொட்டி வருகிற ஏப்ரல் மாதம் 9-ந் தேதி இங்கு ஜல்லிக்கட்டு நடத்த கலெக்டர் அனுமதி வழங்க வேண்டும் என கூறியிருந்தனர்.
டாஸ்மாக் கடை
கந்தர்வகோட்டை தெத்துவாசல்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், தெத்துவாசல்பட்டியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என ஊர் பொதுமக்கள் பல போராட்டங்களை நடத்தி வந்த நிலையில் இந்த டாஸ்மாக் கடையை அகற்றாமல் டாஸ்மாக் கடைக்கு புதிய கட்டிடங்கள் கட்டும் முயற்சி நடைபெற்று வருவதாக தெரிகிறது. எனவே இது குறித்து கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து புதிய டாஸ்மாக் கடைக்கு கட்டிடங்கள் கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும். மேலும் இந்த டாஸ்டாக் கடையை நெடுஞ்சாலை பகுதியில் இருந்து அகற்ற வேண்டும். இல்லையென்றால் நாங்கள் மீண்டும் மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறியிருந்தனர்.
ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்
இதைப்போல குன்றாண்டார்கோவில் ஒன்றியம் கொப்பம்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், கொப்பம்பட்டி கிராமத்தில் வடநீர் குளம் உள்ளது. இந்த குளத்தை தற்போது ஒரு சிலர் ஆக்கிரமித்து உள்ளனர். இதனால் குளத்தின் பரப்பளவு குறைந்துவிட்டது. எனவே இது குறித்து கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கூறியிருந்தனர்.