சேப்ளாப்பட்டி குளத்தை தூர்வார விவசாயிகள் வேண்டுகோள்
விவசாய நிலத்தை காக்கவும், குடிநீர் தட்டுப்பாட்டை போக்கவும் சேப்ளாப்பட்டி குளத்தை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.;
நச்சலூர்,
கரூர் மாவட்டம் சேப்ளாப்பட்டி ஊராட்சி சேப்ளாப்பட்டியில் 1,000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவைக்காக அப்பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு குளம் ஒன்று வெட்டப்பட்டது. இந்த குளத்தில் மழை காலங்களில் அப்பகுதியில் உள்ள வடிகால் வாய்க்கால்கள் வழியாக வரும் தண்ணீர் தேங்கி நிற்கும். இதனால் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகளில் எப்போதும் நீர்மட்டம் உயர்ந்து தண்ணீர் இருந்து வந்தது.
இந்த நிலையில் மழை காலங்களில் வடிகால் வாய்க்காலில் தண்ணீர் அதிக அளவில் வரும்போது சேறும், சகதியும் அரித்து கொண்டு வந்ததால் குளத்தின் ஆழம் படிப்படியாக குறைய தொடங்கியது. இக்குளத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆண்டுதோறும் தூர் வாராமல் போனதால் தற்போது சுருங்கிய நிலையில் காட்சி தருகிறது.
தண்ணீர் பஞ்சம்
மேலும் குளத்தில் சீமை கருவேல மரங்கள் வளர்ந்துள்ளதால் மழைநீர் குளத்தில் தேங்கி நிற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இப்போது குளம் வறண்டு காணப்படுகிறது. இதனால் குளத்தின் அருகே உள்ள விவசாய நிலங்கள், கிணறுகள், ஆழ் குழாய் கிணறுகளில் நீர்மட்டம் மிகவும் குறைந்துள்ளது. மேலும் வெயில் காலம் என்பதால் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு, குடிக்க கூட தண்ணீர் கிடைக்காமல் போகும் நிலைக்கு அப்பகுதி பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
வாய்ப்பு
இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-
சேப்ளாப்பட்டி குளம் ஆழமாக இருந்தபோது அதிகளவில் தண்ணீர் தேங்கி நிற்கும். இந்த தண்ணீர் மூலம் அருகில் உள்ள 15 ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலங்களில் நெல், வாழை, பூச்செடிகள் உள்பட பல பயிர்களை சாகுபடி செய்து வந்துள்ளோம். மேலும் குளத்தின் அருகே உள்ள சுமார் 50-க்கும் மேற்பட்ட கிணறுகளில் அதிகளவில் நீர் ஊற்று ஏற்பட்டு நீர்மட்டம் உயர்ந்து எப்போதும் தண்ணீர் இருந்து கொண்டு இருந்ததால் சாகுபடிசெய்வதற்கு சிரமம் ஏற்படவில்லை. இந்த குளத்தின் அருகே மாயனூரில் இருந்து தாயனூர் வரை கட்டளைமேட்டு வாய்க்கால் செல்வதால் தண்ணீர் ஊற்று அதிகளவில் ஊற வாய்ப்பு உள்ளது.
உயர்த்த வேண்டும்
இந்த குளம் தற்போது தூர்ந்து போனதால் வறண்டு காணப்படுகிறது. மேலும் மழை காலங்களில் தேங்கி நிற்கும் சிறிதளவு மழை நீரை குளத்தில் உள்ள சீமை கருவேல மரங்கள் உறிஞ்சிவிடுகின்றன. எனவே குளத்தை தூர்வாரி, சீமை கருவேல மரங்களை அகற்றி விவசாய சாகுபடிகளை காக்கவும், குடிநீர் பஞ்சத்தை போக்கவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.