தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள்; நேரு எம்.எல்.ஏ. வழங்கினார்

தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள்; நேரு எம்.எல்.ஏ. வழங்கினார்

Update: 2017-03-20 22:30 GMT
திருச்சி,

திருச்சி 45-வது வட்ட தி.மு.க. சார்பில் கருமண்டபம் இளங்காட்டு மாரியம்மன் கோவில் அருகில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. வட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இந்த விழாவில் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.என்.நேரு எம்.எல்.ஏ. கலந்து கொண்டு ஏழைப்பெண்களுக்கு இலவச சேலை, பள்ளி மாணவ- மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள், அங்கன் வாடி மையங்களுக்கு சமையல் பாத்திரங்கள், மரக்கன்றுகள் ஆகியவற்றை வழங்கி பேசினார். முன்னதாக தி.மு.க. கொடியையும் நேரு ஏற்றி வைத்தார். முன்னாள் எம்.எல்.ஏ அன்பில் பெரியசாமி, மாநகர தி.மு.க. செயலாளர் அன்பழகன், பகுதி செயலாளர் மோகன்தாஸ் உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்