கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வேலை நிறுத்தம் செய்வோம் கிராம பஞ்சாயத்து துப்புரவு பணியாளர்கள் அறிவிப்பு
நீண்ட நாட்களாக வலியுறுத்தி வரும் கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் வேலை
விருதுநகர்,
கோரிக்கைகள்
இது குறித்து கிராம பஞ்சாயத்து துப்புரவு பணியாளர்கள் சார்பில் கலெக்டரிடம் கொடுக்கப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
கடந்த 3 ஆண்டு காலமாக சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் துப்புரவு பணியாளர்களுக்கு மாவட்ட ஊரக வளர்ச்சிப்பிரிவு அலுவலகத்தில் வழங்கப்படும் ஊதியம் அளிக்கப்படவில்லை. அனைத்து துப்புரவு பணியாளர்களுக்கும் சரியான பணிபதிவேடு பராமரிக்கப்பட வேண்டும். 1992-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி நிலுவை தொகை ரூ.49 ஆயிரத்து 140-ஐ உடனடியாக வழங்க வேண்டும். 2007-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை வழங்கப்பட வேண்டிய ஊதிய நிலுவைத்தொகை ரூ.18 ஆயிரத்து 710-ஐ உடனடியாக வழங்க வேண்டும். சீருடைகள், பணித்தளவாடங்கள், சோப்பு மற்றும் காலணிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உடல் நிலை சரியில்லாமலோ, அவசர காலங்களிலோ எடுக்கப்படும் விடுமுறைக்கு சம்பள பிடித்தம் செய்யக்கூடாது.
வேலை நிறுத்தம்
இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பல முறை வட்டார வளர்ச்சி அலுவலர், பஞ்சாயத்து தலைவர், பஞ்சாயத்து செயலரிடம் மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த கோரிக்கைகளை நிறைவேற்றித் தராத பட்சத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
பம்ப் ஆபரேட்டர்
இந்த நிலையில் கிராம பஞ்சாயத்து பம்ப் ஆபரேட்டர்கள் தொழில் தீர்ப்பாய தீர்ப்பின்படி சிறப்பு ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.