100 நாள் வேலைதிட்டத்தில் 2 வருடமாக ஊதியம் கிடைக்காத நிலை

காரியாபட்டி அருகே உள்ள மேலகள்ளங்குளம் கிராமத்தில் 100 நாள் வேலை

Update: 2017-03-20 23:00 GMT
விருதுநகர்,

வேலைதிட்டம்

மத்திய அரசு கிராம பெண்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கவும், அவர்களின் பொருளாதார நிலை மேம்பாடு அடையவும் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தை அமல்படுத்தி உள்ளது. இத்திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை அளிக்கப்படும் என்ற விதிமுறையை கடும் வறட்சியினை தொடர்ந்து 150 நாட்களாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டது. தற்போது இத்திட்டத்தின் கீழ் 200 நாட்கள் வேலை அளிக்க பரிசீலிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

பிரச்சினை

ஆனால் விருதுநகர் மாவட்டத்தில் பல கிராம பஞ்சாயத்துகளில் 100 நாள் வேலை திட்டத்தின்கீழ் கிராமப்பெண்களுக்கு வேலை வழங்கப்படுவதில்லை என தொடர்ந்து கிராம மக்கள் புகார் கூறி வருகின்றனர். ஆங்காங்கே கிராம பஞ்சாயத்து அலுவலகம் முன்பு பெண்கள் வேலை அளிக்க கோரி முற்றுகை போராட்டமும் நடத்தி வருகின்றனர். இருந்த போதிலும் இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படாத நிலையே நீடிக்கிறது.

புகார்

இந்த நிலையில் காரியாபட்டி அருகே உள்ள மேலகள்ளங்குளம் கிராமத்தை சேர்ந்த பெண்கள் தங்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் தற்போது வேலை வழங்கப்படாததோடு, கடந்த 2 ஆண்டுகளாக இத்திட்டத்தின் கீழ் வேலை செய்த நாட்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என கலெக்டரிடம் புகார் மனு அளித்தனர். இதனை தொடர்ந்து கலெக்டர் சிவஞானம் இது பற்றி விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்