செஞ்சியில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 22 பவுன் நகை–பணம் திருட்டு போலீஸ் விசாரணை

செஞ்சியில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 22 பவுன் நகை, பணம் திருடுபோனது.

Update: 2017-03-20 22:30 GMT

செஞ்சி,

நகை–பணம் திருட்டு

திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிக்கால் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மனைவி சியாமளா(வயது 29). இவர் சம்பவத்தன்று தனது தந்தையுடன் ஒரு பையில் 22 பவுன் நகை மற்றும் பணம், ஏ.டி.எம். கார்டை வைத்து, எடுத்துக் கொண்டு சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக திருவண்ணாமலையில் இருந்து சென்னை செல்லும் அரசு பஸ்சில் ஏறினார். அந்த பஸ் செஞ்சி கூட்டுரோடு பஸ் நிறுத்தத்தில் நின்று பயணிகளை இறக்கி விட்டு புறப்பட்டபோது, சியாமளா தனது கையில் இருந்த பையை திறந்து நக, பணம் உள்ளதா? என்று பார்த்தார். அப்போது அந்த பையில் வைத்திருந்த ரூ.4½ லட்சம் மதிப்புள்ள 22 பவுன் நகை, 1,200 ரூபாய் மற்றும் ஏ.டி.எம். கார்டு ஆகியவை திருடு போயிருந்தது.

போலீஸ் விசாரணை

இதனால் அதிர்ச்சியடைந்த சியாமளா செஞ்சி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரில் திருவண்ணாமலையில் இருந்து தான் பஸ் இருக்கையில் அமர்ந்து வந்தபோது, தன்னுடன் அதே இருக்கையில் அமர்ந்து வந்த 2 பெண்கள் செஞ்சி கூட்டுசாலை பஸ் நிறுத்தத்தில் இறங்கி சென்றனர். எனவே எனது பையில் இருந்த நகை, பணம், ஏ.டி.எம். கார்டை அந்த 2 பெண்களும் அபேஸ் செய்து சென்றிருக்கலாம் என்று கூறியிருந்தனர். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்