கனரா வங்கியில் அதிகாரி வேலை

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் ஒன்று கனரா வங்கி. முன்னணி வங்கியாக திகழும் இந்த வங்கியில் தற்போது ஸ்பெ‌ஷலிஸ்ட் ஆபீசர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Update: 2017-03-20 09:59 GMT
கனரா வங்கியில் சிறப்பு அதிகாரி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. மொத்தம் 101 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இது பற்றிய விவரம் வருமாறு:–

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் ஒன்று கனரா வங்கி. முன்னணி வங்கியாக திகழும் இந்த வங்கியில் தற்போது ஸ்பெ‌ஷலிஸ்ட் ஆபீசர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 101 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். சி.ஏ., நிதி, டேட்டா அனலைடிக்ஸ், எக்கனாமிஸ்ட், செக்யூரிட்டி உள்ளிட்ட பிரிவுகளில் மேனேஜர் பணியிடங்களும், டேட்டா மைனிங் எக்ஸ்பெர்ட், சர்டிபைடு எதிக்கல் கேக்கர், அப்ளிகேசன் செக்யூரிட்டி டெஸ்டர் உள்ளிட்ட பிரிவுகளிலும் அதிகாரி பணியிடங்கள் உள்ளன. பிரிவு வாரியான பணியிட விவரத்தை இணைய தளத்தில் பார்க்கலாம்.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...

வயது வரம்பு :

ஒவ்வொரு பணிக்கும் வெவ்வேறு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதிகபட்சம் 38 வயதுடையவர்களுக்கும் பணிகள் உள்ளன. குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படுகிறது. வயது வரம்பு 1–3–2017–ந் தேதியை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது.

கல்வித் தகுதி :

பி.இ., பி.டெக். பட்டப் படிப்பு  படித்தவர்கள், கணினி அறிவியல் – தொழில்நுட்பம் சார்ந்த முதுநிலை பட்டப்படிப்புகள், சி.ஏ., எம்.பி.ஏ. (நிதி), எம்.எம்.எஸ். (நிதி) உள்ளிட்ட படிப்புகளை படித்தவர்களுக்கு பணிகள் உள்ளன. விண்ணப்பதாரர்கள் படிப்புகளில் குறிப்பிட்ட சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதி, வயது வரம்பு விவரங்களை இணைய தளத்தில் பார்க்கலாம்.

தேர்வு செய்யும் முறை :

தேர்வு, குழு கலந்துரையாடல், நேர்காணல் ஆகிய வற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த தேர்வுகளில் அந்தந்த பணிக்கு அவசியமான தேர்வு முறைகள் மட்டும் பின்பற்றப்படுவது குறிப்பிடத்தக்கது.

கட்டணம் :

எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரூ.100–ம், மற்றவர்கள் ரூ.600–ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 5–4–2017–ந் தேதி வரை விண்ணப்பம் செயல்பாட்டில் இருக்கும். சில பணிகளுக்கு மட்டும், குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை தபால் முறையில் அனுப்ப வேண்டும். தபால் விண்ணப்பங்கள் சென்றடைய கடைசி நாள் 12–4–2017–ந் தேதியாகும்.

விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.canarabank.com என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.

மேலும் செய்திகள்