என்ஜினீயர்கள், பட்டதாரிகள் கடற்படையில் சேர்ப்பு

இந்திய ராணுவத்தின் முப்படை பிரிவுகளில் ஒன்றான கடற்படை பல்வேறு சிறப்பு நுழைவுகளின் அடிப்படையில் தகுதியான இளைஞர்களை படைப்பிரிவில் சேர்த்து வருகிறது.

Update: 2017-03-20 09:54 GMT
கடற்படையில் பைலட் பணிக்கு என்ஜினீயர்கள் மற்றும் பட்டதாரிகளை சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:–

இந்திய ராணுவத்தின் முப்படை பிரிவுகளில் ஒன்றான கடற்படை பல்வேறு சிறப்பு நுழைவுகளின் அடிப்படையில் தகுதியான இளைஞர்களை படைப்பிரிவில் சேர்த்து வருகிறது. தற்போது ‘கோர்ஸ் காமென்சிங் ஜன–2018’ பயிற்சியின் கீழ் பைலட் மற்றும் ஏர் டிராபிக் கண்ட்ரோலர்’ பணிகளுக்கு தகுதியானவர்களை சேர்க்க அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஆண்– பெண் இரு பாலருக்கும் பணியிடங்கள் உள்ளன. இவை ‘ஷாட் சர்வீஸ் கமி‌ஷனின்’ கீழ் வரும் பணியிடங்களாகும்.

இந்த பயிற்சியில் சேர விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...

வயது வரம்பு:

ஏர் டிராபிக் கண்ட்ரோல் பணிக்கு 19– 24 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். அதாவது 2–1–1993 மற்றும் 1–1–1997 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட தேதிகளில் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பைலட் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 2–1–1994 மற்றும் 1–1–1999 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட தேதிகளில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி:

என்ஜினீயரிங் பட்டப்படிப்பு படித்தவர்கள் பைலட் பணியில் சேர தகுதியானவர்கள். இறுதியாண்டு இறுதி பருவத் தேர்வை எதிர்கொள்பவர்களும் விண்ணப்பிக்க முடியும். இயற்பியல், கணித பாடங்கள் அடங்கிய பிரிவில் பிளஸ்–2 படிப்பை படித்து, பின்னர் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பை 60 சதவீத மதிப்பெண்களுடன் நிறைவு செய்தவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்களே.

‘ஏர் கண்ட்ரோல் டிராபிக் கண்ட்ரோலர்’ பணிக்கு பிளஸ்–2 படிப்பை 60 சதவீத மதிப்பெண்களுடன் நிறைவு செய்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யும் முறை:

சர்வீசஸ் செலக்சன் போர்டு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு முறைக்கு உட்படுத்தப்படுவார்கள். நுண்ணறிவுத் திறன், படங்களை புரிந்து கொள்ளுதல், கலந்துரையாடல், உளவியல் திறன், குழுத் தேர்வு, நேர்காணல், உடற்திறன், மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட தேர்வு முறைகளுக்கு உட்படுத்தி தகுதியானவர்கள் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் அதிகாரியாக பணி நியமனம் பெறலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். விண்ணப்பங்கள் 31–3–2017 வரை இணையதளத்தில் செயல்பாட்டில் இருக்கும். இறுதியில் பூர்த்தியான விண்ணப்ப படிவத்தை கணினி பிரதி எடுத்து பிற்கால உபயோகத்திற்காக வைத்துக்கொள்ளவும்.

விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை அறியவும் www.joinindiannavy.gov.in  என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.

மேலும் செய்திகள்