ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் எடுத்து வந்த 5 டேங்கர் லாரிகள் சிறைபிடிப்பு
ஓட்டப்பிடாரம் அருகே ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் எடுத்து வந்த 5 டேங்கர் லாரிகளை கிராம மக்கள் சிறைபிடித்தனர்.
ஓட்டப்பிடாரம்,
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள வெள்ளாரம் கிராமப்பகுதியில் ஆழ்துளை கிணறுகள் உள்ளன. இந்த ஆழ்துளை கிணறுகளில் அரசு அனுமதியின்றி தினமும் 100–க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகளில் நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு வந்தது. இதனால் அந்த பகுதி மக்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதன்பேரில் அந்த பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறுகளுக்கு வணிக நோக்கத்துடன் தண்ணீர் எடுக்கப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் வெள்ளாரம் பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறுக்கு சீல் வைக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று மீண்டும் அந்த பகுதியில் இருந்து 5 டேங்கர் லாரிகளில் திருட்டுத்தனமாக நிலத்தடி நீரை ஏற்றிக் கொண்டு வெள்ளாரம் பஸ் நிறுத்தம் அருகே வந்தனர். அப்போது அந்த பகுதி மக்கள் திரண்டு வந்து 5 டேங்கர் லாரிகளையும் சிறைபிடித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஓட்டப்பிடாரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசுந்தர், கிராம நிர்வாக அலுவலர் மகராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, திருட்டுத்தனமாக நிலத்தடி நீர் எடுத்து வந்தால் லாரி பறிமுதல் செய்யப்படும் என்று லாரி டிரைவர்கள் எச்சரிக்கப்பட்டனர். அதன்பிறகு தண்ணீர் ஏற்றி வந்த டேங்கர் லாரிகள் விடுவிக்கப்பட்டன.
நடவடிக்கை
இதுகுறித்து ஓட்டப்பிடாரம் தாசில்தார் முருகானந்தத்திடம் கேட்ட போது, வெள்ளாரம் பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறுக்கு ஏற்கனவே சீல் வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் அதனை அகற்றி தண்ணீர் உறிஞ்சி உள்ளனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மீண்டும் ஆழ்துளை கிணறுகளுக்கு சீல் வைக்கப்படும். அனுமதியின்றி குடிநீர் உறிஞ்சிச் செல்லும் டேங்கர் லாரிகள் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.