பிரசவத்தின் போது தாய்–குழந்தை பலி: பாறசாலையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

பிரசவத்தின் போது தாய்–குழந்தை பலி: பாறசாலையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

Update: 2017-03-19 22:15 GMT
களியக்காவிளை,

களியக்காவிளை அருகே குளப்புறத்தை சேர்ந்தவர் ராஜன், கூலி தொழிலாளி. இவருடைய மனைவி சஜிதா கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள மாநிலம் பாறசாலை அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டார். பிரசவத்தின் போது, தாயும், குழந்தையும் பரிதாபமாக இறந்தனர்.

இந்த சம்பவத்தை கண்டித்தும், சம்பந்தப்பட்ட டாக்டர் மீது நடவடிக்கை மேற்கொள்ள கேட்டும் காங்கிரஸ் சார்பில் பாறசாலை சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் எம்.எம்.ஏ. ஜார்ஜ் தலைமை தாங்கினார். கிள்ளியூர் தொகுதி ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். போராட்டத்தில் கேரள மற்றும் குமரி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒரு உருவ பொம்மையை ஊர்வலமாக கொண்டு வந்து பாறசாலை சந்திப்பில் எரித்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்