சுரண்டை அருகே நண்பர் வீட்டில் நகை திருட்டு; தாய்–மகன் கைது

சுரண்டை,
சுரண்டை அருகே வீரகேரளம்புதூர் ஆர்.சி. சர்ச் தெருவை சேர்ந்தவர், மணி மகன் பிரேம்குமார் (வயது 26). அதே பகுதியை சேர்ந்தவர் அருள்தாசன். இருவரும் நண்பர்கள். தேனியில் காங்கிரீட் வேலை பார்த்து வருகின்றனர். இந்தநிலையில் பிரேம்குமார் கடந்த வாரம் ஊருக்கு வந்துள்ளார். அப்போது அருள்தாசின் வீட்டில் மின்விளக்கு எரியவில்லை என கூறியதையடுத்து, பிரேம்குமார் அதனை சரிசெய்தார். அப்போது பீரோவில் நகைகள் இருந்துள்ளதை கவனித்துள்ளார்.
அதன் பின்னர் சம்பவத்தன்று நள்ளிரவில் தெருநல்லியில் குடிநீர் பிடிப்பதற்காக அருள்தாசின் மனைவி வேளாங்கண்ணி வெளியே சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட பிரேம்குமார் உடனடியாக அருள்தாசின் வீட்டுக்குள் சென்று, பீரோவில் இருந்த 19 கிராம் தங்க நகைகளை திருடிக் கொண்டு வெளியே சென்றார். அவர் வெளியே சென்றதை வேளாங்கண்ணி பார்த்ததும், வீட்டின் உள்ளே பீரோவை திறந்து பார்த்துள்ளார். அதில் இருந்த நகைகளை காணாமல் அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து வீரகேரளம்புதூர் போலீசில் அவர் புகார் செய்தார். சப்–இன்ஸ்பெக்டர் செல்வி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், அருள்தாசின் வீட்டில் 19 கிராம் தங்க நகைகளை பிரேம்குமார் திருடியதும், அந்த நகைகளை அவரது தாயார் ஜோதியிடம் கொடுத்து வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து தாய், மகனை போலீசார் கைது செய்து, திருடிய நகைகளையும் மீட்டனர்.